மங்களூருவில் சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிரான்ஸ்பார்மரில் கை வைத்த நபர்- வீடியோ உண்மையா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மங்களூருவில் ஒருவர் டிரான்ஸ்பார்மரில் கைவைத்து தற்கொலைக்கு முயன்றதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Archived Link 2

29 விநாடி ஓடும் வீடியோ ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் என்று எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அலறல் சத்தம் மட்டுமே கேட்கிறது. நிலைத் தகவலில், “CAA/NRC/NPR இன்று, மங்களூரில் இமாலய எதிர்ப்பு. இந்த வீடியோவில் உள்ள விஷயங்களை தேசிய சேனல் காட்டவில்லை, ஆதலால் நாம் அனைவரும் குரூப்பில் சேர் செய்யவும்.” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, Ibrahim Ibu என்பவர் 2020 ஜனவரி 28ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கடந்த மாதம் மதுரையில் ராணுவ வீரர் ஒருவர் டிரான்ஸ்பார்மரில் கை வைத்து தற்கொலைக்கு முயன்றதாக செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வீடியோவை எடுத்து கர்நாடக மாநிலம் மங்களூருவில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது என்று வெளியிட்டுள்ளனர்.

உண்மையில் இது மதுரையில் நடந்தது என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களைத் தேடினோம். 

Search Link

கூகுளில் மதுரையில் ராணுவ வீரர் தற்கொலை முயற்சி என்று டைப் செய்தபோது வரிசையாக பல செய்திகள் நமக்கு கிடைத்தன. அந்த செய்தியைப் பார்த்தோம். பாலிமர் வெளியிட்டிருந்த செய்தியில், “மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற ராணுவ வீரர், மின்சாரம் தாக்கியதில், தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.

நிலக்கோட்டையை சேர்ந்த தேனிஷாவை 4 மாதங்களுக்கு முன்பு உரப்பனூர் சேர்ந்த ராணுவ வீரர் சக்தி திருமணம் செய்தார். பின்னர் ராணுவ பணிக்கு சக்தி சென்றுவிட்டநிலையில் தேனிஷா வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

விடுமுறையில் சக்தி ஊர் வந்த நிலையில், தேனிஷா நேற்று தற்கொலை செய்தார். இதுகுறித்த ஆர்டிஓ விசாரணைக்கு வந்த சக்தி, மனைவி இறந்த துக்கத்தில் டிரான்ஸ்பர்மரில் ஏறி வயரை பிடித்து தற்கொலைக்கு முயன்றார். அதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சக்தி, உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.” என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனால், அவர்கள் வெளியிட்ட யூடியூப் வீடியோ நீக்கப்பட்டு இருந்தது. 

polimernews.comArchived Link 1
newsj.tvArchived Link 2

நியூஸ் ஜெ வெளியிட்டிருந்த செய்தியில் வீடியோ கிடைக்கவில்லை. ஆனால், அந்த நபர் டிரான்ஸ்பார்மர் மீது கை வைக்கும் படம் கிடைத்தது.

வீடியோ கிடைக்குமா என்று தொடர்ந்து தேடியபோது, தினமலர் வெளியிட்ட வீடியோ கிடைத்தது. அது ஓரளவுக்குத் தெளிவாக இருந்தது. வீடியோவிலேயே விசாரணைக்கு வந்த ராணுவ வீரர் தற்கொலை முயற்சி என்று குறிப்பிட்டிருந்தனர்.

Archived Link

இதன் மூலம் மதுரையில் நடந்த சம்பவத்தை மாற்றி மங்களூருவில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் நடந்த சம்பவம் என்று தவறான தகவல் சேர்த்து வெளியிட்டிருப்பது உறுதியானது. இதன் அடிப்படையில் இந்த ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:மங்களூருவில் சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிரான்ஸ்பார்மரில் கை வைத்த நபர்- வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False