ரயில்வே தனியார் மயமாக்கப்படுகிறதா?- அமைச்சர் பியூஸ் கோயல் மறுப்பு

அரசியல் சமூக ஊடகம்

‘’ரயில்வே தனியார் மயமாக்கப்படுகிறது,’’ என்று கூறி சமூக ஊடகங்களில் வித விதமான தகவல்கள் நாள்தோறும் பகிரப்பட்டு வருகிறது. இவற்றின் நம்பகத்தன்மை பற்றி நமது வாசகர்கள் ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டதால், இந்த செய்தியை வெளியிடுகிறோம். 

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

இதுபோன்ற தகவலை மேலும் பலர் பகிர்ந்து வருவதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:
ரயில்வே தனியார் மயமாக்கப்படுவதால், ரயில்வே ஊழியர்கள், முதியோர் உள்ளிட்டோருக்கு கிடைக்கும் பயணச் சலுகைகள் உள்ளிட்ட பல விசயங்களில் பாதிப்பு ஏற்படும் என்று மேற்குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவுகளில் கவலை தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய விசயம் என்பதால், உண்மையிலேயே ரயில்வே தனியார் மயமாக்கப்படுகிறதா இல்லையா என்பது பற்றி ஆய்வு செய்ய, நமது வாசகர்கள் கேட்டுக் கொண்டனர். 

இதன்படி, முதலிலேயே நாம் தெளிவாக தெரிவிக்க விரும்புவது என்னவெனில், இந்த செய்திக்கட்டுரை வெளியிடப்படும் இந்த நொடி வரையிலும், இந்திய ரயில்வேத்துறை தனியார்மயமாக்கப்படவில்லை.

இதுபோன்ற தகவல்கள் சமூக ஊடகங்களில் மிக வைரலாக பரவி வருவதால், இதுபற்றி ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் விளக்கம் அளித்துள்ளார். அந்த செய்தி விவரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

Newsonair LinkArchived Link

அதாவது, ரயில்வே அமைச்சரின் கூற்றுப்படி பார்த்தால், ‘’ரயில்வே தனியார் மயமாக்கப்படவில்லை. பயணிகள் நெரிசல் மற்றும் தேவையை கருத்தில்கொண்டு, நாடு முழுக்க 109 வழித்தடங்களில், நவீனமான 151 ரயில்களை அறிமுகம் செய்ய ரயில்வே தீர்மானித்துள்ளது. இவை தனியார் நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும். இந்த ரயில்களின் டிரைவர், பாதுகாப்புப் பணியாளர்கள் உள்பட அனைவருமே ரயில்வே ஊழியர்கள்தான். இதுதவிர வேறு எந்த தனியார்மயமும் ரயில்வேயில் அமல்படுத்தும் எண்ணம் இல்லை,’’ என்று தெரியவருகிறது.

எனவே, தனியார் பங்களிப்புடன் 151 புதிய ரயில்களை இந்திய ரயில்வே அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அந்த தகவலைச் சிலர் மிகைப்படுத்தி ஒட்டுமொத்தமாகவே ரயில்வே தனியார்மயமாக்கப்படுவதாகக் கூறி வதந்தி பரப்புகின்றனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு: 

உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்தியில் வாசகர்களை குழப்பக்கூடிய தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இதுபோன்ற குழப்பமான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை கண்டால் +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவியுங்கள்.

Avatar

Title:ரயில்வே தனியார் மயமாக்கப்படுகிறதா?- அமைச்சர் பியூஸ் கோயல் மறுப்பு

Fact Check By: Pankaj Iyer 

Result: Misleading

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply