‘’மு.க.ஸ்டாலின் பற்றி அழகிரி சொன்ன உண்மை,’’ என்ற தலைப்பில் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link Archived Link

இந்த பதிவில் புதிய தலைமுறை வெளியிட்டுள்ளது போன்ற ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யவில்லை. எதற்காக கைது செய்யப்பட்டார் என வெளிப்படையாகச் சொல்ல முடியாது,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனை உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்கின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட நியூஸ் கார்டை பார்க்கும்போதே அது போலியாக தயாரிக்கப்பட்ட ஒன்று என தெளிவாக தெரிகிறது. ஆம், அதில் பல எழுத்துப் பிழைகள் இடம்பெற்றுள்ளன. ஒரு முன்னணி செய்தி ஊடகம் இப்படி பிழைகளுடன் செய்தி வெளியிட்டிருக்க வாய்ப்பில்லை. இதுபற்றி புதிய தலைமுறையின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் தேடினோம். அப்படி எதுவும் தகவல் கிடைக்கவில்லை. அங்கே பணிபுரியும் நமது நண்பர்கள் சிலரிடம் இதுபற்றி தகவல் கேட்டபோது, ‘’இப்படியான நியூஸ் கார்டை எங்களது ஆன்லைன் குழுவினர் வெளியிடவில்லை,’’ என மறுத்துவிட்டனர்.

இதுபற்றி புதியதலைமுறை வெளியிட்ட செய்தியின் விவரமும் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. அதன் தலைப்பு, புகைப்படங்கள் அனைத்துமே வேறு ஒன்றாக உள்ளது.

PuthiyaThalaimurai FB LinkPuthiyaThalaimurai News Link

நவம்பர் 13ம் தேதியன்று எச்.ராஜா வீட்டிலேயே சென்று மு.க.அழகிரி சந்தித்துப் பேசினார். இதுபற்றி பல்வேறு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. அப்போது பலரும் திமுக பற்றி கேட்டபோது, அழகிரி விமர்சிக்க மறுத்துவிட்டார்.

Vikatan News Link Maalaimalar News Link

இதுதவிர நவம்பர் 14ம் தேதியன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அழகிரி ரஜினி பற்றி பேசியுள்ளார். ஆனால், ஸ்டாலின் பற்றி எதுவும் விமர்சிக்கவில்லை.

NDTV Tamil LinkNews18 TamilNadu Link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த விவரம்,

1) புதிய தலைமுறை இப்படி எந்த செய்தியும் வெளியிடவில்லை.
2) அழகிரியும் எந்த இடத்திலும் ஸ்டாலின் பற்றி விமர்சிக்கவில்லை.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:மு.க.ஸ்டாலின் பற்றி அழகிரி எதுவும் சொன்னாரா?

Fact Check By: Pankaj Iyer

Result: False