ஜியோ ஜி என்ற பெயரில் முகேஷ் அம்பானி புதிய கேம் அறிவித்ததாகப் பரவும் வதந்தி

அரசியல் சமூக ஊடகம்

‘’ஜியோ ஜி என்ற பெயரில் முகேஷ் அம்பானி புதிய கேம் அறிவித்துள்ளார்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

இதில், ஏஎன்ஐ செய்தி நிறுவனம் பகிர்ந்ததைப் போல ஒரு ட்வீட் பதிவின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அதில், ‘’இந்திய அரசு பப்ஜி விளையாட்டிற்கு தடை விதித்த நிலையில், ஜியோ ஜி என்ற புதிய மல்ட்டிபிளேயர் கேமை முகேஷ் அம்பானி அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளார்,’’ என்று ஆங்கிலத்தில் எழுதியுள்ளனர்.

இந்த தகவல் ஃபேஸ்புக் மட்டுமின்றி ட்விட்டர், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட இதர சமூக வலைதளங்களிலும் டிரெண்டிங் ஆகி வருகிறது. 

Twitter Thread Link

உண்மை அறிவோம்:
ஆங்கிலம், தமிழ் மட்டுமின்றி, இந்திய மொழிகள் பலவற்றிலும் பரவி வரும் மேற்கண்ட தகவல் உண்மையா என்று பார்த்தால் இல்லை என்பதே பதில்.

சமீபத்தில் ஆன்லைன் கேம் ஆர்வலர்களின் நயாகரா ஊற்று போல வர்ணிக்கப்படும் PubG விளையாட்டிற்கு மத்திய அரசு தடை விதித்தது. பப்ஜி உள்பட ஏராளமான சீன ஆப்களுக்கும் தடை நிலவுகிறது. ஆனால், பப்ஜி பயனாளர்கள் அதிகம் என்பதால், அவர்கள் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தங்களது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர்.

இதையொட்டி, பப்ஜி தடை செய்யப்பட்டால் என்ன, விரைவிலேயே முகேஷ் அம்பானி, ஜியோ ஜி என்ற கேம் அறிமுகம் செய்வார், என்று கூறி சிலர் நகைச்சுவைக்காக தகவல் பகிர்ந்தனர். 

ஆனால், நகைச்சுவைக்கு பகிரப்பட்ட தகவல், படிப்படியாக உண்மை போல மாற தொடங்கியதால், அதனை பலர் உண்மை என நம்பி, வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். முன்னணி ஊடகங்கள் கூட இதனை உண்மை என நம்பி பகிர்ந்துள்ளனர்.

இதுபோலவே, நாம் ஆய்வு செய்யும் பதிவிலும் தகவல் பகிரப்படுகிறது. உண்மையில், அது ANI வெளியிட்ட செய்தி அல்ல. ஏஎன்ஐ பெயரில் செயல்படும் போலி ட்விட்டர் ஐடியில் பகிரப்பட்ட தகவல் இதுவாகும்.

அதனை உற்று கவனித்தாலே நன்கு விவரம் புரியும். 

இதில் குறிப்பிட்டுள்ள ட்விட்டர் ஐடியை (@Man_isssh) தேடிப் பார்த்தோம். அப்போது, AIN என்ற பெயரில் தகவல் பகிர்ந்த குறிப்பிட்ட நபர், பிறகு Manish என ஐடி பெயரை மாற்றிக் கொண்டுள்ளார் என தெரியவந்தது. தவிர, அவர் வெளியிட்ட இதே பதிவையும் நாம் கண்டுபிடித்துள்ளோம். 

Twitter Post LinkArchived Link 

 
ANI பெயரில் செய்தி பகிர்ந்து பிரச்னையான பிறகு, தனது பெயரை Manish என மாற்றிக் கொண்டு, குறிப்பிட்ட நபர் ட்வீட் வெளியிட்டு வருகிறார். இதனை அவரது ட்விட்டர் லாக்இன் ஐடி (@Man_isssh) பெயரை வைத்து நாம் கண்டுபிடித்துள்ளோம். இவரது பதிவை பலரும் உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர்.

எனவே, நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்ட தகவல், படிப்படியாக, உண்மை போல நம்பி பகிரப்பட்டு வருவதாக, சந்தேகமின்றி தெளிவாகிறது. முகேஷ் அம்பானி இதுவரை, இப்படியான அறிவிப்பை வெளியிடவில்லை.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவு தவறானது என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஜியோ ஜி என்ற பெயரில் முகேஷ் அம்பானி புதிய கேம் அறிவித்ததாகப் பரவும் வதந்தி

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •