மது பாட்டிலுடன் செல்லும் பெண் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்தவரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழகம்

நாம் தமிழர் கட்சி ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண் ஒருவர் கையில் மது பாட்டில் உள்ளது போன்ற படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Naam 2.png
Facebook LinkArchived Link

இருசக்கர வாகனத்தில் நாம் தமிழர் கட்சி பெயர் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் பின்னால் அமர்ந்திருக்கும் பெண்ணின் கையில் மது பாட்டில் போல ஒன்று உள்ளது. நிலைத் தகவலில் நாம் தமிழர் கட்சியைக் கிண்டல் செய்யும் வகையில் “நாய் டம்ளர் கட்சி” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, Swaminathan என்பவர் டிசம்பர் 27, 2019 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நாம் தமிழர் கட்சியினர் ஒழுக்கக் கேடான விஷயங்களை செய்து வருவதாக சமூக ஊடகங்களில் தொடர்ந்து வதந்தி பரப்பி வருகின்றனர். விபசார விடுதி நடத்தியதாக, பெண்களை ஆபாச படம் எடுத்ததாக, கள்ளச்சாராய ஆலை நடத்தியதாக நாம் தமிழர் கட்சியினர் மீது அவ்வப்போது சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வந்தன. தற்போது, நாம் தமிழர் கட்சி ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் பெண்ணின் கையில் மது பாட்டல் உள்ளதாகவும், நாம் தமிழர் கட்சியினர் எந்த அளவுக்கு ஒழுக்கக்கேடானவர்கள் என்பது போலவும் பதிவை வெளியிட்டுள்ளனர்.

Naam 3.png

அந்த புகைப்படத்தை உற்றுப் பார்த்தால், வண்டியின் பதிவு என் எம்.எச் அதாவது மகாராஷ்டிரா என்று இருப்பதைக் காண முடிந்தது. அதேபோல், சுற்றிலும் உள்ள கடைகளின் பெயர்ப் பலகை மராத்தியில் இருப்பதைக் காண முடிந்தது. மகாராஷ்டிராவில் எடுக்கப்பட்ட படத்தைத் தமிழ் நாட்டில் எடுக்கப்பட்டது போல வெளியிட்டுள்ளது தெரிந்தது.

Naam 4.png
Search Link

ஒருவேளை மகாராஷ்டிராவில் உள்ள நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் வண்டியாக இருக்கலாமா என்று கண்டறிய படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பல ஆண்டுகளாக இந்த புகைப்படம் சமூக ஊடக பக்கங்களில் பகிரப்பட்டு வருவது தெரிந்தது. Puradsifm என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த படம் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி பதிவிட்டிருந்தது நமக்கு கிடைத்தது. அதில், வண்டியின் பின்பகுதியில் நாம் தமிழர் என்ற பெயரோ, அக்கட்சியின் சின்னமோ இல்லை.

இதன் மூலம், வட இந்தியாவில் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்ட படத்தை எடுத்து, அதில் நாம் தமிழர் கட்சி பெயர் மற்றும் சின்னத்தை சேர்த்து அவதூறு பரப்பும் நோக்கில் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதியானது. இதன் அடிப்படையில், இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:மது பாட்டிலுடன் செல்லும் பெண் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்தவரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False