நிர்மலா சீதாராமன் மகள் ராணுவத்தில் பணிபுரிகிறாரா?

அரசியல் சமூக ஊடகம்

நிர்மலா சீதாராமன் மகள் ராணுவத்தில் பணிபுரிகிறார், என்று கூறும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

C:\Users\parthiban\Desktop\nirmala 2.png

Facebook Link I Archived Link

சுப்பிர மணியன் என்பவர் கடந்த ஜனவரி 1, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்திருக்கிறார். இதில், நிர்மலா சீதாராமன் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிர்மலாவுடன் ஒரு இளம் ராணுவ அதிகாரி நிற்கிறார். இதன் மேலே, ‘’ இதுதான் BJP..!!! #தாய் இராணுவ அமைச்சர்… #மகள் இராணுவ வீரர்… (மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன்.. தனது மகளுடன் ) பாரத் மாதா கீ ஜே…,’’ என்று எழுதியுள்ளனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது போல, நிர்மலா சீதாராமன் மகள், ராணுவத்தில் பணிபுரிகிறாரா என சந்தேகம் எழுந்தது. இதன்பேரில், வேறு யாரேனும் ஃபேஸ்புக்கில் தகவல் பகிர்ந்துள்ளனரா என ஆதாரம் தேடினோம். அப்போது, இது தவறான தகவல் என தெரியவந்தது.

C:\Users\parthiban\Desktop\nirmala 3.png

இதன்படி, நிர்மலா சீதாராமனுடன் நிற்பவர் அவரது மகள் இல்லை. அவர் அருணாச்சல பிரதேசம், ஹூய்லாங் பகுதியில், பணிபுரியும் ராணுவ அதிகாரி நிகிதா வீரய்யா என்றும், மங்களூரை சேர்ந்தவர் என்றும் தெரியவருகிறது. நவம்பர் 7, 2018 அன்று தீபாவளி பண்டிகையை ராணுவ அமைச்சர், ராணுவ வீரர்களுடன் கொண்டாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இதுவாகும். இதுபற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

C:\Users\parthiban\Desktop\nirmala 4.png

இந்த வதந்தியை, ஏற்கனவே பாதுகாப்புத் துறை அமைச்சகம் நிராகரித்து, உரிய மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுதவிர, நிர்மலா சீதாராமன் மகள், வங்கமாயி பாரகலா ஆவார். அவர் ஒரு பத்திரிகையாளராக பணிபுரிகிறார்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு, தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் தகவல் தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:நிர்மலா சீதாராமன் மகள் ராணுவத்தில் பணிபுரிகிறாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •