வாட்ஸ்ஆப் முடக்கப்படும்- மோடி அரசின் புதிய அதிரடி: வதந்தியை நம்பாதீர்கள்!

சமூக ஊடகம் | Social

‘’வாட்ஸ்ஆப் நள்ளிரவில் முடக்கப்படும், மோடி அரசின் புதிய அதிரடி,’’ என்ற தலைப்பில் ஒரு வாட்ஸ்ஆப் வதந்தியை காண நேரிட்டது. இதனை பலரும் பகிர்ந்து வருவதால், இதுபற்றி உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

C:\Users\parthiban\Desktop\whatsapp 1.png

தமிழ், ஆங்கிலம் என மாறி மாறி, இந்த வதந்தி வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

C:\Users\parthiban\Desktop\whatsapp 3.png

உண்மை அறிவோம்:
கடந்த ஜூலை 3ம் தேதி முதலாக, இந்த வதந்தி பரவி வருகிறது. இதனை பலரும் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகிறார்கள். இதற்கு முதன்மை காரணம், வாட்ஸ்ஆப் சர்வர் பிரச்னை அன்று ஏற்பட்டதுதான். இது உலகம் முழுவதும் ஏற்பட்ட பிரச்னையாகும்.

C:\Users\parthiban\Desktop\whatsapp 4.png

இதையொட்டி பலரும் பலவித வதந்திகளை பகிர்ந்து வருகிறார்கள். ஆனால், இந்த பிரச்னையை சரிசெய்ததோடு, இதுபற்றிய வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராமின் உரிமையாளரான ஃபேஸ்புக் விளக்கம் அளித்துவிட்டது. இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

C:\Users\parthiban\Desktop\whatsapp 5.png

சாதாரண சர்வர் பிரச்னை என்பதால், அதனை சரிசெய்துவிட்டதாக, ஃபேஸ்புக் கூறிவிட்ட நிலையில், பலரும் இதனை நம்பாமல் புதுப்புது வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

குறிப்பாக, நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில், மோடிக்கு நன்றி என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள். ஃபேஸ்புக் நிறுவனத்திற்கும், மோடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது கூட அவர்களுக்கு புரியவில்லை.

C:\Users\parthiban\Desktop\whatsapp 6.png

எனவே, இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி தவறான தகவல் என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி, தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:வாட்ஸ்ஆப் முடக்கப்படும்- மோடி அரசின் புதிய அதிரடி: வதந்தியை நம்பாதீர்கள்!

Fact Check By: Pankaj Iyer 

Result: False