‘’விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்’’ என்று அண்ணாமலை அறிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

புதிய தலைமுறை லோகோவுடன் உள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’ விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டி. பாரதபிரதமர் மோடி அவர்களின் ஆணைக்கினங்க நானே விக்ரவாண்டி இடைத்தேர்தலில் நேரடியாக போட்டியிடுகிறேன் – அண்ணாமலை அறிவிப்பு,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

இதேபோன்று தந்தி டிவி லோகோவுடன் கூடிய நியூஸ் கார்டு ஒன்றும் பகிரப்படுகிறது. அதனையும் கீழே இணைத்துள்ளோம்.

இதிலும், ‘’விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டி’’ என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே களமிறங்கினார். ஆனால், அவரால் 2ம் இடம் மட்டுமே பெற முடிந்தது.

Dinamani Link

இதனையடுத்து, சமூக வலைதளங்களில் பலரும் அண்ணாமலையை கேலி கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், தற்போது விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆளுங்கட்சியான திமுக வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது.

DTNext Link l Dinamalar Link l Nakkheeran Link

இதேபோன்று, பாஜக கூட்டணி சார்பாக, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் என்று சிலர் சமூக வலைதளங்களில் தகவல் பரப்புகின்றனர். ஆனால், இது உண்மை கிடையாது.

இதுதொடர்பாக, நாம் பாஜக தமிழ்நாடு ஐ.டி., பிரிவு மற்றும் தந்தி டிவி, புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவை தொடர்புகொண்டு பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். இதன்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டுகள் இரண்டுமே போலியானவை, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அண்ணாமலை அறிவித்தாரா?

Written By: Fact Crescendo Team

Result: False