1990 மற்றும் 2019 இடையே பணிபுரிந்தவர்களுக்கு EPFO நிதி உதவி வழங்குகிறதா?

சமூக வலைதளம் வர்த்தகம்

‘’1990 மற்றும் 2019 இடையே பணிபுரிந்தவர்கள் EPFO தரும் ரூ.80,000 நிதி உதவியை பெற உரிமை பெற்றவர்கள்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப்பில் பகிரப்படும் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

நமது நண்பர் ஒருவர் மேற்கண்ட தகவலை WhatsApp மூலமாக அனுப்பி உண்மையா எனக் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் இத்தகைய தகவல் ஏதேனும் பகிரப்பட்டுள்ளதா என விவரம் தேடினோம். அப்போது பலர் இதனை பகிர்ந்து, மற்ற வாசகர்களை குழப்பியதை காண முடிந்தது.

உண்மை அறிவோம்:
தொழிலாளர் சேமநல நிதி அல்லது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, மத்திய அரசின் மேற்பார்வையில் தேவையான ஓய்வூதியம், சம்பள பிடித்தம், சேமிப்பு உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது.

இதன் விதிமுறைக்கு உள்பட்டு ஒருவர் வருங்கால வைப்பு நிதி பெறுவது, ஓய்வூதியம் பெறுவது மற்றும் சேமிப்பு மேற்கொள்வது உள்ளிட்ட சேவைகளைப் பெற பிரத்யேக வழிகள் உள்ளன. இதுபற்றிய நிதி ஆலோசனைகள் தர அரசு அங்கீகாரம் பெற்ற முகவர்கள் பலர் உள்ளனர். அத்துடன் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் நிர்வாகத்திடம் இதுபற்றிய சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்துகொள்ளலாம். இதுதொடர்பான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

உண்மை இப்படியிருக்க, மேற்கண்ட வாட்ஸ்ஆப் மற்றும் ஃபேஸ்புக் செய்தியில் பகிரப்படும் தகவலில் ஒரு இணையதள லிங்க் தரப்பட்டுள்ளது. அது EPFO இணையதளம் கிடையாது. அதனை கிளிக் செய்தால், சைபர் செக்யூரிட்டி இல்லாத ஒரு தகவல் திருட்டு முயற்சி நடைபெறும் முகவரி அது என, நமக்கு விவரம் கிடைத்தது.

உண்மையான EPFO இணையதளத்தின் முகவரி இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இதன் சேவைகளை ஆன்லைன் வழியாக எளிதில் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய வதந்திகளை நம்ப வேண்டாம் என அக்டோபர் 29, 2019 அன்று EPFO ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது. எனவே, போலிகளை கண்டு ஏமாற வேண்டாம்.

Archived Link 

முடிவு:
வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் போன்றவற்றில் பகிரப்படும் பெரும்பாலான தகவல்களில் உண்மையில்லாத சூழல் நிலவுகிறது. அப்படி பகிரப்படும் தகவல்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்காமல், அவற்றை நம்பி சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று நமது வாசகர்களுக்கு அறிவுறுத்த விரும்புகிறோம். 

Avatar

Title:1990 மற்றும் 2019 இடையே பணிபுரிந்தவர்களுக்கு EPFO நிதி உதவி வழங்குகிறதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •