
‘’ஆப்கானிஸ்தானில் பயணிகள் விமான விபத்து: 83 பேரின் கதி என்ன,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் செய்திகளை காண நேரிட்டது. இவற்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link | Archived Link 1 | Samayam Tamil Link | Archived Link 2 |
சமயம் தமிழ் வெளியிட்ட செய்தியைப் போலவே தினகரன், ஒன் இந்தியா தமிழ் உள்பட நிறைய இணையதளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
OneIndia Tamil Link | Archived Link |
Dinakaran News Link | Archived Link |
உண்மை அறிவோம்:
இந்த செய்திகளில் தவறான புகைப்படம் மற்றும் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் குறிப்பிடப்படுகின்றன. உண்மையில், ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்தது, பயணிகள் விமான விபத்து கிடையாது. அங்கே விழுந்து நொறுங்கியது அமெரிக்க ராணுவத்திற்குச் சொந்தமானதாகும். அதில், 6 பேர் வரை இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அவர்களின் சடலத்தை தலிபான்கள் கைப்பற்றியதாக தெரிகிறது.
இதே செய்தியை BBC Tamil எப்படி வெளியிட்டுள்ளது என்பதை இங்கே கிளிக் செய்து படித்துப் பாருங்கள்.

இதே செய்தியை மற்ற ஊடகங்கள் எப்படி வெளியிட்டுள்ளன என்பதையும் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படித்து பார்க்கலாம்.
Aljazeera News Link | BBC News Link |
இதுதவிர, இந்திய செய்தி நிறுவனமான ஏஎன்ஐ, முதலில் குழப்பமான தகவல்களை வெளியிட்டிருந்தாலும் பிறகு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, அப்டேட் செய்தியை வெளியிட்டிருக்கிறது.

ANI News Link | Archived Link |
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், செய்தி நிறுவனங்கள் அளித்த பிரேக்கிங் செய்தியை சரிபார்க்காமல், உடனடியாக முன்னுக்குப் பின் முரணான தகவல்கள், புகைப்படங்களை சேர்த்து செய்தியாக வெளியிட்டுள்ளனர். அது பயணிகள் விமானமும் கிடையாது, அதில் 83 பேரும் பயணிக்கவில்லை.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட செய்தியில், பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய குழப்பமான செய்திகளை நம்பி பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஆப்கானிஸ்தானில் பயணிகள் விமான விபத்து: உண்மை செய்தி என்ன?
Fact Check By: Pankaj IyerResult: Partly False
