1953, மே மாதம் 11-ந் தேதி வெளியான விடுதலை நாளேட்டில் காமம் பற்றி பெரியார் எழுதினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’காமத்தை அடக்கவில்லை எனில் உன் தாய், மகளிடம் அதை தீர்த்துக் கொள்,’’ என்று பெரியார் கூறியதாக, ஒரு தகவல் நீண்ட நாளாக ஃபேஸ்புக்கில் பகிரப்படுவதைக் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். 

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

இதில், பெரியார் திருமணக் கோலத்தில் நடந்து வரும் புகைப்படம் ஒன்றையும், அதன் மேலே, அவர் அமர்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் இணைத்து பகிர்ந்துள்ளனர். மேலே, ‘’காமத்தை அடக்க முடியவில்லை என்றால் உன் தாயிடமோ மகளிடமோ அதை தீர்த்துக் கொள். அவர்களும் பெண்கள்தான். உன் திருப்தியே உனக்கு முக்கியம் – விடுதலை ஏடு 11.5.1953. தந்தை பெரியார்,’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்வதையும் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:
பெரியார் புகைப்படம் வைத்தும், அவரது புகைப்படம் இன்றியும், இந்த தகவலை பலரும் பகிர்ந்து வருகிறார்கள். நாம் ஆய்வு செய்யும் பதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தில் ‘Keelathooval newspaper‘ என்ற லோகோ உள்ளது.

எனவே, இந்த பெயரில் எதுவும் பதிவு பகிரப்பட்டுள்ளதா என விவரம் தேடினோம். அப்போது, 2017ம் ஆண்டில் இந்த பதிவு வெளியிடப்பட்டதாக தெரியவந்தது. 

Keelathooval Newspaper FB LinkArchived Link

இதன்படி, 2017ம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்த தகவல் இன்றளவும் உண்மை போல பகிரப்படுவதாக, தெளிவாகிறது.

அதேசமயம், இந்த பதிவுக்கு அப்போதே, விடுதலை நாளேடு சார்பாகவும், பெரியாரிய ஆதரவாளர்கள் சார்பாகவும் உரிய விளக்கம் அளிக்கப்பட்டிருந்ததை இங்கே நினைவூட்ட விரும்புகிறோம்.

சிலர் ஒருபடி மேலே சென்று, குறிப்பிட்ட 11.05.1953 அன்று வெளியான விடுதலை நாளேட்டை கண்டுபிடித்து, அதனை புகைப்படம் பிடித்து பதிவிட்டிருந்ததையும் கண்டோம். அதில் எந்த இடத்திலும் பெரியார் அப்படி சொன்னதாக, தகவல் இல்லை.

Archived Link

இதேபோல, விடுதலை நாளேடு தரப்பிலும் அப்போதே உரிய விளக்கம் தரப்பட்டுள்ளது. அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்

Viduthalai.in LinkArchived Link 

எனவே, 11.05.1953 அன்று வெளியான விடுதலை நாளேட்டில் இல்லாத தகவலை உண்மை போல குறிப்பிட்டு சிலர் அரசியல் உள்நோக்கத்திற்காக, வதந்தி பரப்பி வருவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் தகவல் தவறானது என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:1953, மே மாதம் 11-ந் தேதி வெளியான விடுதலை நாளேட்டில் காமம் பற்றி பெரியார் எழுதினாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False