‘’யானைகளை தத்தெடுத்து மதம் மாற்றிய வேளாங்கண்ணி சர்ச்,’’ என்று கூறி பரவும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link 1Archived Link 1
Facebook Claim Link 2Archived Link 2

இந்த புகைப்படம் பற்றிய தகவல் டிரெண்டிங் ஆக தொடங்கியுள்ளதால், இது உண்மையா, பொய்யா என ஆய்வு செய்யும்படி, வாசகர்கள் நம்மிடம் வாட்ஸ்ஆப் வழியே கேட்டுக் கொண்டனர்.

உண்மை அறிவோம்:
இவர்கள் சொல்வது போல இந்த தகவல் உண்மையா என்று பார்த்தால், இல்லை. இது 2017ம் ஆண்டு முதல் பகிரப்பட்டு வரும் புகைப்படம் ஆகும்.

இதன்படி, கேரள மாநிலம், Forona Catholic Church, Aruvithura-ல் இந்த புகைப்படம் கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் பிரபலமான அரசியல்வாதி பி.சி.ஜார்ஜ் குடும்பத்தினருக்குச் சொந்தமான யானைதான் இது. அவர்களது உறவினர்கள், 50க்கும் மேற்பட்ட யானைகளை வளர்ப்பதோடு, அவற்றை அவ்வப்போது தாங்கள் வழிபடும் தேவாலயத்திற்கு அழைத்துச் சென்று கடவுளின் ஆசிர்வாதம் வாங்கி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். குறிப்பிட்ட யானையின் பெயர் மகாதேவன்.

Asianetnews LinkThenewsminute LinkMathrubhumi LinkBusinessstandard Link

எனவே, கேரளாவில் நிகழ்ந்த ஒரு பழைய செய்தியை எடுத்து, தமிழகத்தில் உள்ள வேளாங்கண்ணி தேவலாயத்துடன் தொடர்புபடுத்தி தவறான தகவல் பகிர்கிறார்கள் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் புகைப்படம் பற்றிய தகவல் தவறு என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:வேளாங்கண்ணி சர்ச் யானைகளை தத்தெடுத்து மதம் மாற்றியதாகப் பரவும் வதந்தி!

Fact Check By: Pankaj iyer

Result: False