கிறிஸ்தவராக மதம் மாறிய மோடி: ஃபேஸ்புக் வதந்தி!

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க அதிரடி… கிறிஸ்தவத்திற்கு மாறினார் பிரதமர் மோடி என்று ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

MODI 2.png
Facebook LinkArchived Link

இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த தேவாலயத்துக்கு பிரதமர் மோடி சென்றபோது எடுக்கப்பட்ட படம் பகிரப்பட்டுள்ளது. படத்தின் மீது, “பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க அதிரடி. கிறிஸ்தவத்திற்கு மாறினார் பிரதமர் மோடி. நாட்டேனியல் தாஸ் மோடி என்று பெயர் மாற்றி கிறிஸ்துவத்தை தழுவினார்” என்று போட்டோஷாப் முறையில் டைப் செய்யப்பட்டிருந்தது.

இந்த பதிவை, Dumeels என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 நவம்பர் 3ம் தேதி வெளியிட்டுள்ளது. நிலைத் தகவலில், “எழுத்தாளர் வசந்தி அவர்கள் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி கிருத்துவத்தை தழுவிவிட்டார் என ஒரு செய்தியை புகைப்பட ஆதாரத்துடன் பகிர்ந்துள்ளார். உண்மை நிலவரம் என்ன? ஒரே குழப்பமாக உள்ளது. என்ன நடக்கிறது?

செய்தி: இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க, மதம் மாறி பிரதமர் மோடி அதிரடி நடவடிக்கை. கடந்த வாரம் இத்தாலி நாட்டிற்கு 4 நாட்கள் பயணமாக சென்றிருந்த இந்திய பிரதமர் மோடி, திடீரென வாடிகன் சிட்டி சென்று போப்பை சந்தித்து மத விவகாரம் முதல் பொருளாதாரம் வரை பேசியதாக தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஞாயிறு அன்று போப் முன்னிலையில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். அவர் தனது பெயரைநட்டேனியல்தாஸ் மோடிஎன்று மாற்றிக்கொண்டு ஞானஸ்தானம் பெற்றதாக வாட்டிகன் நகர செய்தி குறிப்புகள் கூறுகின்றன.

தொடர்ச்சியாக வீழ்ந்து வரும் இந்தியப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த பிரதமர் மோடி இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. மோடியின் இம்முடிவை உள்துறை அமைச்சர் அமித்ஷா நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் வரவேற்று அவரை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

மோடியின் இம்முடிவு பல்வேறு உலகத் தலைவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும் இன்னும் சில நாட்களில் இந்தியா வல்லரசாக ஆகும் எனவும் பிரபல பொருளாதார வல்லுநர் போர்டுதாஸ் கூறியுள்ளார். மோடியின் ஆதரவாளர்களும் பெருமளவில் மதம் மாறி சமூக ஊடகங்களில் தங்களது பெயர்களை மாற்றி வருகின்றனர். ஆமென்..!” என்று குறிப்பிட்டுள்ளனர்.

வசந்தி என்பவர் வெளியிட்ட பதிவு உண்மையா பொய்யா என்று தெரியாமல் குழம்பிப்போய் அதை தன்னுடைய பக்கத்தில் பதிவிட்டது போல குறிப்பிட்டுள்ளனர்.

உண்மை அறிவோம்:

2019 கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகையின்போது இலங்கையில் உள்ள சில முக்கிய தேவாலயங்கள், ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த நிலையில், பிரதமர் மோடி இலங்கைக்குச் சென்றபோது, குண்டுவெடிப்பு நிகழ்ந்த தேவாலயத்துக்கு சென்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய படத்தை வெளியிட்டு, “மோடி கிறிஸ்தவத்தைத் தழுவினார்” என்று குறிப்பிட்டுள்ளனர். படத்தில் கிறிஸ்தவ பேராயர், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்டவர்கள் இருப்பதைக் காணலாம்.

Archived Link

பிரதமர் மோடி சமீபத்தில் இத்தாலிக்கு செல்லவில்லை. அப்படி இருக்கும்போது அவர் இத்தாலி சென்றார் என்றும் அங்கு அவர் மதம் மாறினார் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்கள் மோடியின் மத மாற்றத்தை வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

MODI 3.png
pmindia.gov.inArchived link

வசந்தி என்பவர் வெளியிட்ட பதிவு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பதிவாளர் குறிப்பிட்டுள்ளார். எனவே, வசந்தி என்பவர் வெளியிட்ட பதிவை தேடி எடுத்தோம். வாட்சப் வசந்தி என்ற ஃபேஸ்புக் ஐ.டி கொண்ட நபர் இந்த பதிவை அக்டோபர் 1, 2019 அன்று வெளியிட்டுள்ளார். அவருடைய மற்ற பதிவுகளைப் பார்த்தோம்… எல்லாமே பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் வகையிலேயே இருந்தது. பதிவாளரின் பின்னணியை ஆய்வு செய்தோம். தன்னைப் பற்றிய சுய குறிப்பில், “இவ்விடம் தரமான முறையில் வாட்சப் வதந்திகள் உருவாக்கித்தரப்படும். உண்மையான தமிழனாய் இருந்தால் உடனடியாக லைக் செய்யுங்கள்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

MODI 4.png

பிரதமர் மோடியை கிண்டல் செய்து வெளியிடப்பட்ட பதிவை மறுபதிவு செய்து அது உண்மையா பொய்யா என்று பலரும் தீவிரமாக விவாதித்து வருவது வேடிக்கையாக உள்ளது. 

நம்முடைய ஆய்வில், இலங்கையில் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மோடி மரியாதை செலுத்தியபோது எடுக்கப்பட்ட படம் இது என்பதும் பதிவிட்டவரின் பின்னணியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க கிறிஸ்தவத்திற்கு மதம் மாறினார் பிரதமர் மோடி என்ற பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கிறிஸ்தவராக மதம் மாறிய மோடி: ஃபேஸ்புக் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False