‘’ஸ்கூல் வாடகை கட்ட முடியவில்லை,’’ என்று ரஜினிகாந்த் கூறியதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

இந்த தகவலை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
கடந்த ஆகஸ்ட் மாதம், நடிகை ஜோதிகா, தஞ்சை அரசு மருத்துவமனைக்கு, மருத்துவ உபகரணங்கள் வாங்க உதவும் வகையில், ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கினார்.

KumudamOnline News Link

இதைத்தொடர்ந்து, பலரும் ரஜினியை கிண்டல் செய்து, தகவல் பகிர தொடங்கினர். அப்படி பகிரப்பட்ட போலியான செய்திதான், நாம் மேலே கண்ட ட்விட்டர் பதிவும்.

உண்மையில், அது ரஜினியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஐடி கிடையாது.

ஆம், இதில், ஐடியின் பெயர் @RajiniOffl என்றும், 08.08.2020 அன்று இந்த பதிவு வெளியிடப்பட்டதாகவும் காண முடிகிறது.

ஆனால், @RajiniOffl என விவரம் தேடியபோது, அந்த பெயரில் செயல்பட்டு வந்த ட்விட்டர் ஐடி முடக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது. போலி ட்விட்டர் ஐடி என்பதால், ரஜினி தரப்பில் இதனை ரிப்போர்ட் செய்திருக்கலாம்.

உண்மையில், ரஜினியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஐடி @rajinikanth ஆகும். அவர், 08.08.2020 அன்று ஏதேனும் தகவல் பகிர்ந்துள்ளாரா எனப் பார்த்தால் இல்லை என்பதே பதில்.

எனவே, ரஜினி பெயரை பயன்படுத்தி, சிலர் உருவாக்கிய போலியான தகவலை உண்மை என நம்பி மற்றவர்கள் ஷேர் செய்து வருகின்றனர் என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால் +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவியுங்கள்.

Avatar

Title:ஸ்கூல் வாடகை கட்ட முடியவில்லை என்று ரஜினிகாந்த் கூறியதாக பரவும் வதந்தி

Fact Check By: Pankaj Iyer

Result: False