சாலையில் நடனம் ஆடினாரா சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

சிவசேனா கட்சியைச் சேர்ந்த எம்.பி சஞ்சய் ராவத் சாலையில் நடனமாடியதாக சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Archived Link 2

சிவசேனா கட்சியின் பிரபல நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் போல் உள்ள ஒருவர் நடனமாடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “என்ன சஞ்சய் ராவத் இன்னொரு ஆட்டம்

ஆடுவோமா?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை Vijayakumar Arunagiri என்பவர் 2019 நவம்பர் 23ம் தேதி பகிர்ந்துள்ளார். 

உண்மை அறிவோம்:

மும்பையில் நடிகை கங்கனா ரணாவத்தை மிகக் கடுமையாக விமர்சித்து வருபவர் சிவசேனா கட்சியின் மூத்த எம்.பி சஞ்சய் ராவத். இவர் சாலையில் நடனமாடியதாக சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். கங்கனா ரணாவத் அலுவலகத்தை இடித்த பிறகு நடனமாடிய சஞ்சய் ராவத் என்றும், மும்பை வந்து இறங்கிய கங்கனாவை வரவேற்ற சஞ்சய் ராவத் என்று ட்விட்டரில் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். எனவே, இந்த வீடியோ பற்றிய உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம்.

Archived Link

வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது சமூக ஊடகங்களில் பலரும் இந்த வீடியோவை சஞ்சய் ராவத்தின் நடனம் என்று பகிர்ந்து வந்திருப்பதைக் காண முடிந்தது. அதே நேரத்தில் நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மராத்தி உள்ளிட்டவற்றில் ஃபேக்ட் செக் கட்டுரைகள் வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. 

esakal.comArchived Link

முதலில் நமக்குக் கிடைத்த செய்திகளை ஆய்வு செய்தோம். 2019ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி வெளியாகி இருந்த செய்தியை மொழி மாற்றம் செய்து பார்த்தோம். அதில், பர்பானியில் சஞ்சய் ராவத் தோற்றம் கொண்ட போலீஸ் தலைமைக் காவலர் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டிருந்தனர். பர்பானியில் காவல் துறையில் பணியாற்றும் அந்த நபர் பெயர் லக்‌ஷ்மன் பதர்கே என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும் லக்‌ஷ்மன் காவலர் சீருடையிலிருந்த படத்தையும் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவையும் பகிர்ந்திருந்தனர்.

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மராத்தியில் வெளியான செய்தியைப் பார்த்தோம். அதில், கடந்த ஆண்டே இது தொடர்பாக வெளியான செய்தியையும், தலைமைக் காவலர் பேட்டியையும் வெளியிட்டிருந்தனர். அவர் அளித்திருந்த பேட்டியில், “என் நண்பரின் மகனின் திருமணத்தில் நடனமாடியபோது எடுத்த வீடியோ அது. அந்த வீடியோவை எடிட் செய்து, சஞ்சய் ராவத் நடனமாடியதாக பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்” என்று கூறியதாகக் குறிப்பிட்டிருந்தனர். மேலும், அவர் ஃபேக்ட் கிரஸண்டோவுக்கு அளித்திருந்த வீடியோ பேட்டியையும் வெளியிட்டிருந்தனர்.

இதன் மூலம், சஞ்சய் ராவத் நடனமாடியதாக கூறப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:சாலையில் நடனம் ஆடினாரா சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •