1862ம் ஆண்டு சரவணா ஸ்டோர்ஸ் ஆரம்பித்தபோது எடுத்த புகைப்படம் இதுவா?

சமூக வலைதளம் வர்த்தகம்

‘’1862ம் ஆண்டு சரவணா ஸ்டோர்ஸ் ஆரம்பித்தபோது எடுத்த புகைப்படம்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு வைரல் பதிவை காண நேரிட்டது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 

Eeram Magi எனும் ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை மே, 6, 2014 அன்று வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் அந்தக் கால மளிகைக் கடை ஒன்றின் முன்பாக சிலர் நிற்பதை காண முடிகிறது. அதில், ‘’இன்று தி.நகரையே தனதாக்கிகொண்டிருக்கும் சென்னை சரவணாஸ்டோர் 1862 ஜனவரியில் எடுத்த அன்றைய ஆரம்பித்த சரவணாஸ்டோர் படம்தான்,’’ என்று எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட புகைப்படம் 1862ம் ஆண்டு எடுக்கப்பட்ட சரவணா ஸ்டோர்ஸ் புகைப்படம் எனக் கூறப்பட்டாலும், அந்த புகைப்படத்திலேயே, இது 1908ல் எடுக்கப்பட்ட ஒரு பெட்டிக் கடையின் படம் என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. 

இதில் இருந்தே இதற்கும் சரவணா ஸ்டோர்ஸ்க்கும் சம்பந்தம் இல்லை என தெளிவாக தெரிகிறது. இருந்தாலும் இந்த புகைப்படம் எங்கே எடுக்கப்பட்டது என்ற விவரம் அறிய கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இது கேரளாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்ற விவரம் கிடைத்தது. 

Kerala Rare Photos என்ற தலைப்பில் யூ டியுப் பதிவர் ஒருவர் பிரத்யேக வீடியோ ஒன்றை 2013ம் ஆண்டு பகிர்ந்துள்ளார். அதில் மேற்கண்ட புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

இதுபற்றி விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இது மட்டுமின்றி, சரவணா ஸ்டோர்ஸ் எப்போது தொடங்கப்பட்டது என்ற விவரம் தேடிப் பார்த்தோம். அப்போது, 1969ம் ஆண்டில் சென்னையில்தான் முதலில் தொடங்கப்பட்டது என்றும், ஆரம்பத்திலேயே அது ஜவுளிக்கடையாக தொடங்கி பின்னர் சூப்பர் ஸ்டோராக மாற்றப்பட்டது என்றும் விவரம் கிடைத்தது. 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

1) சரவணா ஸ்டோர்ஸ் தொடங்கப்பட்டது 1969ம் ஆண்டில்.
2) நாம் ஆய்வு செய்யும் புகைப்படம் எடுக்கப்பட்டதோ 1908ம் ஆண்டு கேரளாவில் ஆகும்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவு தவறான தகவல் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:1862ம் ஆண்டு சரவணா ஸ்டோர்ஸ் ஆரம்பித்தபோது எடுத்த புகைப்படம் இதுவா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False