‘’கனடா பிரதமரின் மனைவி கொரோனா வைரஸ் நோயில் பாதிக்கப்பட்ட வீடியோ,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஃபேஸ்புக் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link Archived Link

இதில், பெண் ஒருவர் ஆங்கிலத்தில் கொரோனா வைரஸ் பற்றி பேசுகிறார். அவரை பார்க்க கொரோனா வைரஸ் நோயாளி போல உள்ளார். எனினும், இவரை கனடா பிரதமரின் மனைவி எனக் கூறி பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட வீடியோவில் பேசுபவர் உண்மையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி கிடையாது. இவர் யாரோ ஒரு கொரோனா நோயாளி என்பது மட்டும் தெளிவாகிறது. உதாரணத்திற்காக, ஜஸ்டின் மனைவி Sophie Grégoire Trudeau புகைப்படத்தையும், நாம் ஆய்வு செய்யும் பதிவில் உள்ள பெண்ணின் புகைப்படத்தையும் ஒப்பிட்டுள்ளோம்.

இதையடுத்து, மேற்கண்ட புகைப்படத்தில் இருப்பவர் யாரென அறிய ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இதில் இருப்பவர் லண்டனைச் சேர்ந்த பெண் என தெரியவந்தது. அந்த பெண்ணின் பெயர் Tara Jane Langston ; இவருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளதாகக் கூறி, அவரது சகோதரி ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்தான் இந்த வீடியோ இடம்பெற்றுள்ளது. அவரது ஃபேஸ்புக் பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, பல்வேறு ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது.

The Guardian News LinkArchived Link
Puthiyathalaimurai News Link Archived Link

இதுதவிர, நமது ஆங்கில பிரிவினர் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி, முடிவை சமர்ப்பித்துள்ளனர். அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

முடிவு:
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வு செய்த வீடியோ பதிவில் இருக்கும் பெண் வேறொருவர், கனடா பிரதமர் ஜஸ்டின் மனைவி வேறொருவர் என்பதை நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:இந்த வீடியோவில் பேசும் பெண் கனடா பிரதமரின் மனைவியா?

Fact Check By: Pankaj Iyer

Result: False