திருப்பூர் வெள்ளகோவிலில் பேய் அசைவதாக தந்தி டிவி செய்தி வெளியிட்டதா?

சமூக ஊடகம்

‘’திருப்பூர் வெள்ளகோவிலில் அமானுஷ்யமான உருவம் அசைவதால் பரபரப்பு,’’ என தந்தி டிவி செய்தி வெளியிட்டதாகக் கூறி ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

C:\Users\parthiban\Desktop\tirupur 2.png

Facebook Link I Archived Link

திருப்பூர் மாவட்டம் முக்கிய செய்திகள் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை ஜூலை 27, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், கோயில் ஒன்றின் அருகே பேய் தோன்றுவது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதன் மேலே, ‘’ திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் கோவிலில் உள்ள நடுப்பாளையம் என்னும் கிராமத்தில் உள்ள கோவிலின் அருகே அமானுஷ்யமான ஒரு உருவம் அசைவதைக் கண்டு ஊர் மக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்,’’ என்று குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இந்த வீடியோ போலியானது என வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலரே இதில் கமெண்ட் பகிர்ந்துள்ளனர்.

C:\Users\parthiban\Desktop\tirupur 3.png

இந்த வீடியோவை நன்கு உற்று பார்த்தால் அது போலியாகச் சித்தரிக்கப்பட்ட ஒன்று என எளிதில் தெரியும். ஆம். அந்த வீடியோவின் ஆரம்பத்தில் பார்த்தால் எதோ மீம் தயாரிக்கும் டூலை பயன்படுத்தி, போலியாக இதனை தயாரித்துள்ளனர் என தெரியவருகிறது.

C:\Users\parthiban\Desktop\tirupur 4.png

இதுதவிர, வீடியோவில் வரும் எழுத்துகள் ஒரு செய்தித் தொலைக்காட்சி போன்றில்லாமல் சாதாரண நபர்கள் பயன்படுத்தும் சொல்லாடலைப் போல உள்ளன.

C:\Users\parthiban\Desktop\tirupur 5.png

மேலும், வீடியோ முடிவில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட செய்தியின் நியூஸ் கார்டு இடம்பெற்றுள்ளது. அதில் இருந்து போலியாக இந்த வீடியோவை தயாரித்து பகிர்ந்துள்ளனர்.

C:\Users\parthiban\Desktop\tirupur 6.png

இதை வைத்துப் பார்த்தால், உமா மகேஸ்வரி கொலை வழக்கு பற்றிய செய்தி வீடியோவை எடிட் செய்து, தந்தி டிவி பெயரில் இந்த போலிச் செய்தியை சித்தரித்து பகிர்ந்துள்ளனர் என தெளிவாகிறது.

தந்தி டிவி வெளியிட்ட உண்மையான செய்தி வீடியோ ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

ஒரு முன்னணி தொலைக்காட்சியின் பெயரில் போலியான நியூஸ் வீடியோ தயாரித்து பகிர்வது, மிகப்பெரிய சைபர் குற்றமாகும். அதை உணராமல், அமானுஷ்ய உருவம் தென்படுகிறது என்றெல்லாம் கூறி, மீம்ஸ் ஆப் ஒன்றை பயன்படுத்தி தவறான வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளனர். எனவே, இந்த வீடியோ உண்மையில்லை என, வாசகர்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் வீடியோ போலியாகச் சித்தரிக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள் இத்தகைய தவறான வீடியோ, புகைப்படம் மற்றும் செய்தியை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:திருப்பூர் வெள்ளகோவிலில் பேய் அசைவதாக தந்தி டிவி செய்தி வெளியிட்டதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •