குஜராத்தில் முதலையிடம் இருந்து தப்பிய முதலை: சமயம் தமிழுக்கு வந்த குழப்பம்!

சமூக ஊடகம்

‘’குஜராத்தில் முதலையிடம் இருந்து தப்பிய முதலை,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை சமயம் தமிழ் வெளியிட்டிருந்தது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

C:\Users\parthiban\Desktop\crocodile 2.png

Facebook Link I Archived Link

Samayam Tamil இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ‘’கனமழையால் ஊருக்குள் புகுந்த முதலை: நொடிப்பொழுதில் தப்பிய முதலை,’’ என தலைப்பிட்டு, ஒரு செய்தியை பகிர்ந்துள்ளனர்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட செய்தியை கிளிக் செய்து படித்தபோது, அது சமயம் தமிழ் இணையதளத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ பற்றிய செய்தி என தெரியவந்தது. அந்த செய்தியில், குஜராத்தில் முதலையிடம் இருந்து தப்பிய முதலை என தவறாகவே எழுதப்பட்டுள்ளதை காண முடிந்தது. 

C:\Users\parthiban\Desktop\crocodile 3.png

Website News Link I Archived Link

குறிப்பிட்ட வீடியோவில், வெள்ள நீரில் ஊருக்குள் வந்த முதலை ஒன்று, நாயை கடிக்க முயற்சிக்கிறது. ஆனால், நாய் அங்கிருந்து தப்பியோடுவதைக் காண முடிகிறது. இதன்படி, முதலையிடம் இருந்து நாய் தப்பியதாக தெரிகிறது. ஆனால், சமயம் தமிழ் செய்தியிலோ, முதலையிடம் இருந்து தப்பிய முதலை என முன்னுக்குப் பின் முரணாக தகவல் பகிர்ந்துள்ளனர்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட செய்தியின் தலைப்பு தவறு என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த சமயம் தமிழ் செய்தியின் தலைப்பு தவறாக உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என நமது வாசகர்களை கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:குஜராத்தில் முதலையிடம் இருந்து தப்பிய முதலை: சமயம் தமிழுக்கு வந்த குழப்பம்!

Fact Check By: Pankaj Iyer 

Result: False Headline

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •