இவர்கள் ஒன்றும் மாஸ்டர் பட டிக்கெட் வாங்க வரிசையில் நிற்கவில்லை!

சமூக ஊடகம் சினிமா

‘’மாஸ்டர் பட டிக்கெட் வாங்க வரிசையில் நிற்கும் பெண்கள்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் புகைப்பட பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

பெண்கள் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றோடு வரிசையில் நிற்கும் புகைப்படத்தை இணைத்து, அதன் மேலே, ‘’விரைவில் வரவுள்ள மாஸ்டர் படத்தின் டிக்கெட் முன்பதிவு செய்ய பெண்கள் கூட்டம் அலைமோதியது,’’ என எழுதியுள்ளனர். இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட இடம் ‘பண்டாரபுரம்’ என்றும் குறிப்பிட்டுள்ளனர். 

இதனை பலர் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:
விஜய் நடித்துள்ள புதிய படம் மாஸ்டர். இதன் படப்பிடிப்பு மற்றும் தயாரிப்புப் பணிகள் முடிவடைந்து, கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யவும் தேதி குறிக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பாராவிதமாக, கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால், சினிமா உள்பட அனைத்து தொழில்களும் மூடப்பட்டன. 

இதையடுத்து, படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடப்படாமல் வெளியீட்டுப் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன. இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

படம் எப்போது ரிலீஸ் ஆகும் எனக் கோரி விஜய் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் காரசாரமான விவாதங்களில் ஈடுபடுவதும் வழக்கமாக உள்ளது. இந்நிலையில்தான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பகிரப்பட்டுள்ளது. 

ஆனால், படத்தின் ரிலீஸ் தேதி அல்லது முன்பதிவு எதுவுமே இதுவரை தொடங்கப்படாத நிலையில், முன்பதிவுக்கு காத்திருக்கும் பெண்கள் கூட்டம் என இந்த ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளனர். 

இது முற்றிலும் தவறான தகவலாகும். தமிழகத்தில் சில ஆண்டுகள் முன்பாக, புதிய ரேஷன் அட்டை வழங்காமல் பழைய ரேஷன் அட்டையில் உள்தாள் ஒட்டும் பணி நடைபெற்றது. அப்போது பல இடங்களில் பெண்கள் வரிசையில் நின்று ரேஷன் அட்டையில் உள்தாள் ஒட்டிச் சென்றனர். அப்போது எடுத்த புகைப்படம்தான் இந்த பதிவில் பகிரப்பட்டுள்ளது. 

எனவே, பல ஆண்டுகளாக இணையத்தில் பகிரப்படும் ஒரு புகைப்படத்தின் உண்மைத்தன்மை அறியாமல் அதனை எடுத்து, இன்னமும் நடக்காத ஒரு விசயத்துடன் தொடர்புபடுத்தி பகிர்ந்துள்ளனர் என்று தெளிவாகிறது. 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி ரேஷன் கடையில் கூடிய பெண்களின் புகைப்படத்தை எடுத்து, மாஸ்டர் படத்தின் முன்பதிவுக்கு திரண்ட பெண்கள் என வதந்தி பரப்பியுள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:இவர்கள் ஒன்றும் மாஸ்டர் பட டிக்கெட் வாங்க வரிசையில் நிற்கவில்லை!

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •