‘கற்பை நிரூபிப்பேன்’ என்று ஆதன் தமிழ் மாதேஷ் ட்வீட் பகிர்ந்தாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘கற்பை நிரூபிப்பேன்’ என்று ஆதன் தமிழ் மாதேஷ் ட்வீட் வெளியிட்டதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். 

தகவலின் விவரம்: 

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

Claim Tweet Link l Archived Link 

பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள ஸ்டிங் ஆபரேஷன் வீடியோ காரணமாக, டிஜிட்டல் ஊடக பிரபலங்கள் கிஷோர் கே ஸ்வாமி, உமா மகேஷ்வரன், ‘ஆதன் தமிழ்’ மாதேஷ், ஐயப்பன் ராமசாமி, ராஜவேல் நாகராஜன், ரவீந்திரன் துரைசாமி, முக்தார் போன்றோ சர்ச்சையில் சிக்கியுள்ளனர். 

kamadenu.hindutamil link l ibctamilnadu link 

இந்த விவகாரத்திற்கு பதில் அளித்து, மாதேஷ் மேற்கண்ட வகையில் ட்வீட் வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டு பலரும் தகவல் பகிர்கின்றனர். ஆனால், இது மாதேஷின் உண்மையான ஐடி அல்ல. 

ஆம். இது மாதேஷை கேலி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்ட போலியான ட்விட்டர் ஐடி. இதுபோன்ற ஏராளமான பகடித்தனமான ட்வீட்களை அந்த (ஐடி) பக்கத்தில் காண முடிகிறது. 

குறிப்பிட்ட ட்வீட் பதிவும் கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

Tweet Link 

கூடுதல் ஆதாரத்திற்காக, மாதேஷின் உண்மையான ஐடி லிங்க் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. 

எனவே, மாதேஷ் பெயரில் செயல்படும் போலியான ட்விட்டர் ஐடி வெளியிட்ட பதிவை எடுத்து பலரும் உண்மை போல பகிர்ந்து வருவதாகச் சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:‘கற்பை நிரூபிப்பேன்’ என்று ஆதன் தமிழ் மாதேஷ் ட்வீட் பகிர்ந்தாரா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: False

Leave a Reply