தணிகாசலம் பரிந்துரைத்த சித்த மருந்து எதையும் தமிழக அரசு அங்கீகரிக்கவில்லை!

Coronavirus சமூக ஊடகம் மருத்துவம் I Medical

‘’தணிகாசலம் பரிந்துரைத்த சித்த மருந்தை தமிழக அரசு அங்கீகரித்தது,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். 

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

இந்த ஃபேஸ்புக் பதிவில் சினி கஃபே என்ற இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்கை பகிர்ந்துள்ளனர். இதனை மேலும் பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். 

Cinecafe Link Archived Link 

இந்த செய்தியின் இடையே யூடியுப் வீடியோ ஒன்றின் லிங்கையும் இணைத்துள்ளனர். அந்த வீடியோவையும் பார்வையிட்டோம். ‘’திருத்தணிகாசலம் சில நாள் அவகாசம் கேட்டுக் கொண்டு, சோதனைக்காகச் சில கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு தனது சித்த மருந்தை கொடுத்தார். அந்த மருந்தை பயன்படுத்திய நோயாளிகள் தற்போது உடல்நலம் தேறியுள்ளனர். தற்போது அவரது சித்த மருந்துக்கு தமிழக அரசு அங்கீகாரம் கிடைத்துள்ளது. விரைவில் இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்,’’ என விரிவாகப் பேசுகின்றனர். 

Archived Link 

உண்மை அறிவோம்:
கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் பரவ தொடங்கிய நாள் முதலாக, ‘என்னிடம் அதற்கு மருந்து உள்ளது,’ என்று கூறி சித்த மருத்துவர் தணிகாசலம் பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். சமூக ஊடகங்களில் இதுதொடர்பாக அவர் பலவிதமான வீடியோக்களையும் பகிர்ந்திருந்தார். 

அவரது பேச்சை தமிழக அரசு கேட்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்த தணிகாசலம், ஒருகட்டத்தில் கொரோனா வைரஸ்க்கான சித்த மருந்தை நானே கண்டுபிடித்தேன் என்றும், அதனை தேவைப்பட்டால் சீனாவுக்கு தரவும் தயார், தமிழகத்திலும் பரிசோதிக்க தயார் என்றும் தெரிவித்தார். 

இதுபற்றி தி எகனாமிக் டைம்ஸ் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

எனினும், தமிழக அரசு தணிகாசலம் சொன்ன மருந்தை அங்கீகரித்ததா என்றால், இல்லை என்பதுதான் உண்மை. 

தமிழக அரசு ஏற்கனவே கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் போன்றவற்றை கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்புச் சக்தி அளிக்கக்கூடிய சித்த மருந்துகளாக பயன்படுத்தி வருகிறது. இந்த மருந்துகள் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவமனையின் பரிந்துரைகளின்படியே பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. 

TheNewsMinute LinkTheHindu Link

இந்த கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் போன்றவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இவையே கொரோனா வைரஸ்க்கான மருந்துகள் என்று அர்த்தமாகாது. 

கொரோனா வைரஸ்க்கு இன்னமும் தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த நோய் வந்தால் தாங்கக்கூடிய சக்தியை உடலுக்கு தரவே கபசுர குடிநீர், நிலவேம்பு பரிந்துரைக்கப்படுகிறது. இவற்றை அரசால் அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் இருந்துதான் வாங்க வேண்டும்.

இதுதவிர, சித்த மருத்துவம் உள்பட வேறு ஏதேனும் ஒன்றில் கொரோனாவுக்கு மருந்து உள்ளதா என ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

The Economic Times Link 

இதுதான் தமிழகம் மட்டுமின்றி கொரோனா வைரஸ் தொற்றை சமாளிப்பதில் சித்த மருத்துவம் தற்போது சந்தித்து வரும் நிலை…

ஆனால், தொடர்ச்சியாக, சமூக ஊடகங்கள் வாயிலாக, வித விதமான வீடியோக்கள், செய்திகளை வெளியிட்டு மக்களை குழப்பி வந்த சித்த மருத்துவர் தணிகாசலம் மீது இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் சென்னை போலீசில் புகார் செய்துள்ளார்.  

அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும், தணிகாசலம் பற்றி சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகள், வீடியோக்கள் மற்றும் அவர் பரிந்துரைத்த மருந்துகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் தமிழக சுகாதாரத் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. அவர் அரசு அங்கீகாரம் பெறாத நபர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

TheHindu LinkBBC Tamil LinkTamil OneIndia Link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்:- 

1) மக்களின் உயிரோடு விளையாடியதாகக் கூறி சித்த மருத்துவர் தணிகாசலம் மீது தமிழக அரசு சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அவருக்கு எந்த அங்கீகாரமும் தரவில்லை எனவும் அரசு குறிப்பிட்டுள்ளது. அவரது வீடியோ அல்லது செய்தியை பார்த்து யாரும் ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

2) கோவிட் 19 பற்றியும், அதற்கான மருந்துகள் கண்டுபிடித்துவிட்டதாகவும் கூறி வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக பலர் வதந்தி பரப்பி வருகிறார்கள். 

பொது சுகாதாரத் துறை இயக்குனர் அல்லது ஊரக மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் இயக்குனர் அல்லது மாவட்ட ஆட்சியர் அனுமதி இன்றி இத்தகைய தகவல் பகிரும் நபர்கள் மீது The Epidemic Diseases Act and Regulations பிரிவு 8-ன் கீழ் தண்டிக்கப்படுவார்கள்.   

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட செய்திகளில் கூறப்படும் தகவல் தவறானது என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:தணிகாசலம் பரிந்துரைத்த சித்த மருந்து எதையும் தமிழக அரசு அங்கீகரிக்கவில்லை!

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •