சுட்டது திமுக எம்எல்ஏ இல்லை; அவரது கள்ள துப்பாக்கிதான் என்று பரவும் போலி நியூஸ் கார்டு!

அரசியல் தமிழ்நாடு

‘’சுட்டது திமுக எம்எல்ஏ இல்லை, அவரது கள்ள துப்பாக்கிதான்,’’ என்று கூறி ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்: 

இந்த நியூஸ் கார்டை நமது வாசகர்கள் சிலர் வாட்ஸ்ஆப்பில் பகிர்ந்து, சந்தேகம் எழுப்பியிருந்தனர். எனவே, இதனை ஃபேஸ்புக்கில் யாரேனும் பகிர்ந்துள்ளனரா என்ற விவரம் தேடினோம். அப்போது நிறைய பேர் இதனை பகிர்வதை கண்டோம்.

Facebook Claim Link 1Archived Link 1
Facebook Claim Link 2Archived Link 2
Facebook Claim Link 3Archived Link 3

உண்மை அறிவோம்:
கடந்த ஜூலை 11, 2020 அன்று செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் நில விவகாரம் தொடர்பாக, அதிமுக மற்றும் திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன்போது, திமுகவின் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இதயவர்மன் துப்பாக்கியால் எதிர் தரப்பினரை நோக்கிச் சுட்டு மிரட்டியதாகவும், சிலர் காயமடைந்ததாகவும் புகார் எழுந்தது.

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்தான், நாம் ஆய்வு செய்யும் நியூஸ் கார்டும் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்டவற்றில் பரவி வருகிறது.

உண்மையில் இந்த நியூஸ் கார்டு போலியானதாகும். இதனை நகைச்சுவைக்காக சிலர் தயாரித்து பகிர்ந்திருக்கிறார்கள். ஆனால், படிப்படியாக உண்மை என்றே நம்பி மற்ற ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் பயனாளர்கள் பகிர்ந்து வருவதும் தெளிவாகிறது. 

இதனை நியூஸ்7 ஆன்லைன் பிரிவு நிர்வாகியிடம் காட்டி சந்தேகம் கேட்டபோது, ‘இது போலி நியூஸ் கார்டு’ என்று கூறினார்.

உண்மையில் நியூஸ் 7 தமிழ் ஊடகம் வெளியிட்ட நியூஸ் கார்டு வேறு ஒன்றாகும். அதனை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

News7 Tamil LinkArchived Link

எனவே, Satire ரீதியாகச் சிலர் தயாரித்து வெளியிட்ட போலி நியூஸ் கார்டை நிறைய பேர் உண்மை என நம்பி பகிர்ந்து வருவதாக, சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் தகவல் போலியானது என்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால் +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:சுட்டது திமுக எம்எல்ஏ இல்லை; அவரது கள்ள துப்பாக்கிதான் என்று பரவும் போலி நியூஸ் கார்டு!

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •