ஜேம்ஸ்பாண்ட் பட நாயகியின் படத்தை சோனியா காந்தி என்று பரப்பும் விஷமிகள்!

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

ஜேம்ஸ் பாண்ட் பட நாயகி ஒருவரின் புகைப்படத்தை எடுத்து ‘அன்னை என்று அழைக்கப்படும் கட்சித் தலைவியின் படம்,’ என்று கூறி சிலர் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

Facebook LinkArchived Link

சோனியாகாந்தியின் முகத்தோற்றம் கொண்ட கருப்பு வெள்ளைப் படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த பெண்மணி யார் என்று தெரிகிறதா? அங்கே டான்சர் இங்கே அன்னை! எனக்கல்ல” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை, Murugan Madasamy என்பவர் 2020 ஜூன் 29ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஒருவர் செய்த செயல், கருத்தியல் ரீதியாக ஒருவரை எதிர்க்கலாம்… ஆனால் தரம்தாழ்ந்த தனிநபர் தாக்குதல்கள் எப்போதும் சரியானதாக இருக்காது. சோனியா காந்தியின் குடும்ப வாழ்க்கையை சந்தேகிக்கும் வகையில் பதிவிடுவது எந்த மாதிரியான அரசியல் என்று தெரியவில்லை. கொஞ்சம் மாதங்களுக்கு முன்பு சோனியா காந்தி ஒருவரின் மடியில் அமர்ந்திருப்பது போன்று படத்தை பகிர்ந்தார்கள். அது போட்டோ எடிட் செய்யப்பட்ட படம் என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

தற்போது நீச்சல் உடையில் சோனியா காந்தி உள்ளார் என்று பகிர்ந்து வருகின்றனர். படத்தில் இருப்பவர் சோனியா காந்தி என்று நேரடியாக குறிப்பிடவில்லை.  ஆனால் அன்னை என்ற வார்த்தை பொதுவாக தமிழக காங்கிரஸ் கட்சியினரால் சோனியா காந்தியை குறிப்பதாகவே உள்ளது. மேலும், கமெண்ட் பகுதியில் பலரும் படத்தில் உள்ளவர் சோனியா காந்தி என்றே குறிப்பிட்டு விமர்சித்து வருகின்றனர்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது பல உண்மை தன்மை கண்டறியும் ஆய்வுகள் நடத்தப்பட்டு படத்தில் இருப்பது சோனியா இல்லை என்று கட்டுரை வெளியிட்டிருப்பது தெரிந்தது.

அவற்றை ஒதுக்கிவைத்து படத்தில் இருப்பவர் ஹாலிவுட் நடிகை என்பதற்கான ஆதாரம் கிடைக்கிறதா என்று தேடினோம். அப்போது, ஜேம்ஸ்பாண்ட் படமான டாக்டர் நோ என்ற படத்தில் நடித்த நடிகை உர்ஸ்லா ஆன்டர்சன் என்பதற்கான பல ஆதாரங்கள் கிடைத்தன.

imdb.com எனப்படும் படத்திற்கு வாசகர்கள் வழங்கிய மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப்படுத்தும் தளத்தில் கூட இந்த படம் பயன்படுத்தப்பட்டு இருப்பதைக் காண முடிந்தது.

imdb.comArchived Link 1
closerweekly.comArchived Link 2

ஒருவேளை உர்ஸ்லா ஆன்டர்சன் தற்போது வேறு எந்த ஒரு நாட்டிலாவது அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறாரா என்று தேடினோம். அப்படி எதுவும் இல்லை. 84 வயதான அவர் ஓய்வெடுத்து வருவதாகவே தகவல் கிடைத்தது.

இதன் மூலம் ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடித்த நடிகையின் படத்தை விஷமத்தனமாக, சோனியா காந்தி என்ற வகையில் பதிவிட்டு வருவது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:ஜேம்ஸ்பாண்ட் பட நாயகியின் படத்தை சோனியா காந்தி என்று பரப்பும் விஷமிகள்!

Fact Check By: Chendur Pandian 

Result: False