Explainer: இந்தியர்களின் தனிநபர் வருமானம் வங்கதேசத்தினரை விட குறைந்துவிட்டதா?

அரசியல் இந்தியா

‘’இந்தியர்களின் தனிநபர் வருமானம் வங்கதேசத்தினரை விட குறைவு,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link


16, அக்டோபர் 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், மோடியின் புகைப்படத்தை இணைத்து, அதன் மேலே, ‘’வரலாற்றில் முதல்முறையாக வங்கதேசத்தின் தனிநபர் வருவாயை விட கீழே சென்ற இந்தியர்களின் தனிநபர் வருவாய் – மோடி ஆட்சியின் சாதனை‘’, என்று எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்கின்றனர்.

உண்மை அறிவோம்:
வங்கதேசத்தின் தனிநபர் வருவாயை விட இந்தியர்களின் தனி நபர் வருவாய் 2020ம் ஆண்டில் சிறிதளவு குறைய வாய்ப்புள்ளது, என்று ஐஎம்எஃப் (சர்வதேச நாணய நிதியம்) அண்மையில் மதிப்பீடு வெளியிட்டிருந்தது. இந்தியர்களின் தனிநபர் வருவாய் குறைந்துவிட்டதாக, எங்கேயும் குறிப்பிடவில்லை. இந்த அளவு ஆண்டு இறுதியில் மாறக்கூடும்.  

கூடுதல் விவரத்திற்கு… IndianExpress Link I Archived Link

வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் கடந்த சில ஆண்டாக நிலையான முறையிலும், இந்தியாவில் அது சற்று குறைந்து வருவதோடு, கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, தற்போது வெகுவாக பாதித்துள்ளது என்றும், தெரியவருகிறது. இதன்காரணமாக, இந்தியாவின் தனிநபர் வருமானம் மற்றும் உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தியை, வங்கதேசம் நெருங்கிவிட்டது. இது விரைவிலேயே சொற்ப அளவில் அதிகரித்து, இந்தியாவை கடக்கும் என தெரிகிறது. 

இந்திய ஜிடிபி வளர்ச்சி தற்போது மைனஸில் உள்ளது.

இதேபோல, வங்கதேசத்தின் ஜிடிபி வளர்ச்சி எப்படி உள்ளது என்பதற்கான ஆதாரத்தையும் கீழே இணைத்துள்ளோம். 

வங்கதேசம் மற்றும் இந்தியாவின் தனிநபர் வருவாய் வளர்ச்சி விகிதம் பற்றிய மதிப்பீடு கடந்த 1980ம் ஆண்டில் இருந்தே ஒரே விதமாகவே இருந்துள்ளது. 2000க்குப் பிறகுதான் இந்தியாவின் தனிநபர் வருவாயில் சற்று மேம்பாடு ஏற்பட்டுள்ளது. அது தற்போது கொரோனா முடக்கம் காரணமாக, வீழ்ச்சிக்கு வந்துள்ளது. இதனை எட்டிப்பிடிக்கும் தொலைவில்தான் வங்கதேசமும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகவே இருந்து வருகிறது. எனவே, திடீரென வங்கதேசத்தின் தனிநபர் வருவாய் வளர்ச்சி அதிகரித்துவிட்டதாகவும், இந்தியாவின் வளர்ச்சி வீழ்ந்துவிட்டதாகவும் கூறிவிட முடியாது. 

ஆதாரம் கீழே பார்க்க…

இதுதவிர IMF அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தி லிங்குகளையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம். 

IMF Link 1IMF Link 2IMF Link 3IMF Link 4


இதே செய்தியை தமிழ் ஊடகங்களும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளன. பெரும்பாலான ஊடகங்களிலும் தனிநபர் வருவாயில் வங்கதேசம், இந்தியாவை நெருங்கி வருகிறது என்றே குறிப்பிட்டுள்ளன. ஆனால், சமூக ஊடகங்களில்தான் தவறாக புரிந்துகொண்டு, தகவல் பகிர்ந்து வருகின்றனர்.

Dinakaran News LinkTamil Goodreturns Link


மேலும், ஐஎம்எஃப் வெளியிடும் புள்ளி விவரம் ஓரளவு தோராயமாகவே உண்மையான வளர்ச்சியுடன் ஒத்துப்போகும். கடந்த காலங்களில் ஐஎம்எஃப் வெளியிட்ட உலகப் பொருளாதாரம் பற்றிய உண்மையான (actual growth) பொருளாதார வளர்ச்சி மற்றும் மதிப்பீடு (Projection) எந்தளவுக்கு ஒத்துப் போயிருந்தது என்பதற்கான விவரத்தை கீழே இணைத்துள்ளோம். 

இதுபோலவே, இந்தியா மற்றும் வங்கதேசத்தை ஒப்பிட்டு ஐஎம்எஃப் வெளியிட்டுள்ள தற்போதைய மதிப்பீட்டு அறிக்கையும் அமையக்கூடும். மேலும், வங்கதேசம் மற்றும் இந்தியா இடையிலான தனிநபர் வருவாய் வளர்ச்சி மதிப்பீடு சிறிதளவே வித்தியாசம் கொண்டுள்ளது. அது எப்போது வேண்டுமானாலும் மாறக்கூடும். இதனை முழு உண்மையாக தற்போதைக்கு எடுத்துக் கொள்ள முடியாது. 2020ம் ஆண்டு முடிந்த பிறகே, ஐஎம்எஃப் சொன்னது எந்தளவுக்கு மாறுபடுகிறது என்பதை உணரலாம்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

1) ஐஎம்எஃப், உலகப் பொருளாதார கண்ணோட்டம், என்ற தலைப்பில்தான் புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது.

2) 2020ம் ஆண்டில் இந்தியாவின் தனி நபர் வருவாயை வங்கதேசம் நெருங்கிவிட்டதாகவும், விரைவில் இதனை கடந்து செல்லலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

3) அதேசமயம், இது ஒரு மதிப்பீடு மட்டுமே; எப்போது வேண்டுமானாலும் மாறக்கூடும். இன்னமும் முழுதாக நடந்துவிடவில்லை. மேலும், கடந்த 30 ஆண்டுகளாகவே, இந்தியாவிற்கும், வங்கதேசத்திற்கும் தனி நபர் வருவாய் வளர்ச்சியில் பெரிய அளவில் வித்தியாசம் இருந்ததில்லை. மிக குறுகிய இடைவெளியில்தான் இரு நாடுகளும் உள்ளன.

4) மதிப்பீட்டை அப்படியே நிகழ்ந்துவிட்ட யதார்த்தமாக எடுத்துக் கொண்டு, பலர் சமூக வலைதளங்களில் தகவல் பகிர்ந்து வருகின்றனர். 2020ம் ஆண்டு முடிந்த பிறகே, இந்த மதிப்பீடு எந்தளவுக்கு உண்மையாக மாறியுள்ளது என்பதை கண்டறிய முடியும்.

முடிவு:
தகுந்த ஆதாரங்களுடன் இன்னும் நடைபெறாத விவரத்தை, வெறும் மதிப்பீடு அறிக்கையை வைத்துக் கொண்டு, பலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர் என்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இதுபோன்ற தவறான தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:இந்தியர்களின் தனிநபர் வருமானம் வங்கதேசத்தினரை விட குறைந்துவிட்டதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Explainer

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •