
‘’இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் நிகழ்ந்த எரிமலை வெடிப்பு,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி நமது வாசகர்கள் வாட்ஸ்ஆப் மூலமாகக் கேட்டுக் கொண்டனர்.
தகவலின் விவரம்:
இதில், நீருக்கு அடியில் இருந்து பெருவெடிப்பு நிகழ்ந்து, புகைமூட்டம் எழும் காட்சியை இணைத்து, அதன் மேலே, ‘’ நீருக்கடியில் எரிமலை வெடிப்பு, இந்தோனேசியாவின் சுமத்ராவிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ ஷாட் (இது உங்கள் தொலைபேசி திரை காலியாகிவிடும். க்ளைமாக்ஸைக் காண 15 விநாடிகள் காத்திருக்கவும்) முற்றிலும் சிலிர்ப்பூட்டும்! பயங்கரமானது. இந்த வீடியோவை தவறவிடாதீர்கள்,’’ என்று எழுதியுள்ளனர்.
இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோ காட்சியை பார்த்தால் ஒருவித செயற்கைத் தனம் தெரிவதை உணரலாம். அதாவது, ஒரு எரிமலை வெடிப்பு நிகழும்போது சுற்றுப்புறத்தில் பலவித அதிர்வலைகள் ஏற்படும். ஆனால், இந்த இடத்தில் உள்ள கட்டிடங்கள், கடல் நீர் என அனைத்தும் ஒருவித செயற்கையாகவே தோன்றுகின்றன.
உதாரணமாக, நீருக்கு அடியில் நிகழ்ந்த ஒரு உண்மையான எரிமலை வெடிப்பு எப்படி இருக்கும் என வீடியோ லிங்க் ஒன்றை கீழே இணைத்துள்ளோம்.
ஆனால், உண்மையில் இது கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு நிகழ்ந்தால் எப்படியிருக்கும் என்பதை மதிப்பீடு செய்யும் நோக்கில் ஆஸ்திரேலிய புவியியல் ஆய்வாளர் குழுவினர் ஏற்படுத்திய செயற்கையான வீடியோவாகும்.
எனவே, அனிமேஷன் முறையில் உருவாக்கப்பட்ட செயற்கையான வீடியோ காட்சியை உண்மையாகவே இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் நிகழ்ந்த எரிமலை வெடிப்பு என்று நம்பி தவறான தகவலை பகிர்ந்து வருவதாக, சந்தேகமின்றி உறுதியாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த எரிமலை வெடிப்பு பற்றிய வீடியோ செயற்கையான ஒன்று என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை காண நேரிட்டால், +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Title:இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் நிகழ்ந்த எரிமலை வெடிப்பு: உண்மை என்ன?
Fact Check By: Pankaj IyerResult: False
