பாஜக கொடி ஏற்றும்போது தேசிய கீதம் பாடப்பட்டதா?- முழு விவரம் இதோ!

அரசியல் சமூக ஊடகம்

‘’பாஜக கொடி ஏற்றும்போது தேசிய கீதம் பாடப்பட்ட அவலம்,’’ என்று கூறி பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

இந்த பதிவில், பாஜக கொடியை ஏற்றிவிட்டு, எல்லோரும் தேசிய கீதம் பாடி மரியாதை செலுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதைக் காண முடிகிறது. இதனை 2020 ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தின்போது நடைபெற்றதாகக் கூறி பலரும் ஷேர் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:
2020, ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் 74வது சுதந்திர தினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றி வைத்து, உரை நிகழ்த்தினார்.

இதை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் பலரும் சுதந்திர தின வாழ்த்துகளை பரிமாறிக் கொண்ட நிலையில், சிலர் வேண்டுமென்றே அதனை விமர்சித்தும், அதற்கு எதிராகவும் பதிவிட்டனர். மேலும், சுதந்திர போராட்டத்தில் எந்த பங்களிப்பும் செய்யாத பாஜக, சுதந்திர தினம் கொண்டாடுவதாகக் கூறி, சிலர் காரசாரமான கருத்துகளையும் பகிர்ந்தனர்.

அதில் ஒன்றுதான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவுகள். உண்மையில், இந்த வீடியோ காட்சி ஏதேனும் சுதந்திர தினம் நிகழ்வு தொடர்பானதா அல்லது இது 2020, ஆகஸ்ட் 15ம் தேதி நிகழ்ந்ததா என்று பார்த்தால், இல்லை என்பதே பதில்.

ஆம். இந்த வீடியோ முதன் முதலாக, 2018ம் ஆண்டு மே மாதத்தில் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்று தொடர்பான வீடியோதான் இது. மேலும், சுதந்திர தினம் தொடர்பான நிகழ்ச்சியும் இது கிடையாது.

இதுதொடர்பாக, வட இந்திய பத்திரிகையாளர் Dinesh Shukla என்பவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவின் லிங்கை கீழே இணைத்துள்ளோம்.

Archived Link 

இதன்படி, மேற்கண்ட ட்வீட்டில் இந்தியில் உள்ள கருத்தை, ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து பார்த்தோம்.

அந்த பதிவில், ‘’அரசு நிகழ்ச்சியில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் முன்னிலையில், தேசியக் கொடிக்கு பதிலாக, பாஜக கொடியை ஏற்றிவிட்டு, தேசிய கீதம் பாடுகிறார்கள். இது எப்படி நியாயம்,’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்த சம்பவம், 2018 மே மாதத்தில் மத்திய பிரதேசத்தில் உள்ள Raj Nagar, Chhattarpur district பகுதியில் நிகழ்ந்திருக்கிறது. இது சுதந்திர தினத்தின்போது நடைபெறவில்லை. அரசு நிகழ்ச்சியின்போதுதான் இப்படி செய்துள்ளனர். இது அப்போதே பலராலும் விமர்சிக்கப்பட்ட நிகழ்வாகும். ஊடகங்களிலும் செய்தி வெளியாகியிருக்கிறது. 

Freepressjournal LinkArchived Link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவரும் உண்மையின் விவரம்,

1) மேற்கண்ட வீடியோ 2020, ஆகஸ்ட் 15ம் தேதி நிகழ்ந்தது கிடையாது.

2) இது 2018 மே மாதம் மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்ததாகும். அப்போதும் கூட இது சுதந்திர தினத்துடன் தொடர்பில்லாதது. அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பங்கேற்ற நிகழ்வில், இவ்வாறு பாஜக கொடியை ஏற்றிவிட்டு, தேசிய கீதம் இசைத்துள்ளனர். 

3) வேறொரு நிகழ்வுடன் தொடர்புடைய வீடியோவை எடுத்து, 2020 சுதந்திர தினக் கொண்டாட்டங்களுடன் தொடர்புபடுத்தி தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட வீடியோ பற்றிய தகவல் தவறானது என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால் +91 9049044263 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவியுங்கள்.

Avatar

Title:பாஜக கொடி ஏற்றும்போது தேசிய கீதம் பாடப்பட்டதா?- முழு விவரம் இதோ!

Fact Check By: Pankaj Iyer 

Result: False

1 thought on “பாஜக கொடி ஏற்றும்போது தேசிய கீதம் பாடப்பட்டதா?- முழு விவரம் இதோ!

  1. Dey Iyer,
    Poiyaa. Liar.
    No One stated that it was sung on Aug 15th 2020. It was just said that BJP hoisted BJP’s flag and sang National Anthem Incorrectly which is true.

    You are blot among humans.

Comments are closed.