இது ஜபல்பூர் நர்மதா நீர்வீழ்ச்சி கிடையாது!

இந்தியா சமூக ஊடகம்

‘’இது ஜபல்பூர் நர்மதா நீர்வீழ்ச்சி,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் வீடியோ ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

ஆகஸ்ட், 2, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், நீர்வீழ்ச்சி ஒன்று தொடர்பான வீடியோவை பகிர்ந்து, அதன் மேலே, ‘’அமெரிக்காவின் நயாகரா நீர் வீழ்ச்சி தான் அழகு என்று கூறுபவர்களுக்கு.. மத்தியபிரதேசம் ஜகல்பூர் நர்மதை நீர்வீழ்ச்சி 👍👍👌👇👇,’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்கின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட வீடியோவை ஒருமுறை பார்வையிட்டோம். அப்போது, இது மக்கள் நடமாட்டம் மிகுந்த நீர்வீழ்ச்சி போலவும், அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரியவந்தது. பிரபலமான நீர்வீழ்ச்சியாக இருந்தால்தான் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும்.

எனவே, இந்த வீடியோவின் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, கூகுளில் பதிவேற்றி, அதன் விவரம் தேடினோம். அப்போது, இது கர்நாடகாவில் உள்ள Jog waterfall என தெரியவந்தது. 

நாம் ஆய்வு செய்யும் வீடியோவில் உள்ள காட்சிகளுடன் இந்த நீர்வீழ்ச்சி ஒத்துப் போகிறது. இதில் உள்ள கைப்பிடி, பெயர்ப்பலகை உள்ளிட்டவற்றை வைத்து எளிதில் அடையாளம் காண முடிகிறது.

இதற்கடுத்தப்படியாக, இவர்கள் குறிப்பிடும் Jabalpur Narmada falls பற்றி தகவல் தேடினோம். ஆனால், அதுதொடர்பான காட்சிகள் நாம் ஆய்வு செய்யும் வீடியோ பதிவில் உள்ளதை விட முற்றிலும் மாறுபட்டிருந்தன. 

இந்த நீர்வீழ்ச்சி அவ்வளவு உயரமானதாகவும் இல்லை. இருந்தாலும், காட்சிப் பிழை காரணமாக, இதன் பெயரை ஜோக் நீர்வீழ்ச்சிக்கு பதிலாக, தவறாகக் குறிப்பிட்டுள்ளனர் என்று தெளிவாகிறது.

ஜபல்பூர் நர்மதா நீர்வீழ்ச்சி பற்றிய வீடியோ ஒன்றை கீழே இணைத்துள்ளோம்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

1) நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவில் தெரிவது, ஜோக் நீர்வீழ்ச்சி ஆகும். இது கர்நாடகாவில் உள்ளது.

2) இவர்கள் குறிப்பிடும் ஜபல்பூர் நர்மதா நீர்வீழ்ச்சி என்பது வேறொன்றாகும். அதுபற்றிய வீடியோ ஆதாரங்களும் நமக்கு கிடைத்துள்ளன.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால் +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:இது ஜபல்பூர் நர்மதா நீர்வீழ்ச்சி கிடையாது!

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •