பிரதமர் பதவியேற்ற பிறகு இஸ்கான் கோயில் சென்று ரிஷி சுனக் வழிபட்டாரா?

அரசியல் உலகச் செய்திகள் சமூக ஊடகம்

‘’பிரதமர் பதவியேற்ற பின் இஸ்கான் கோயில் சென்று வழிபட்ட ரிஷி சுனக்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link 

அக்டோபர் 26, 2022 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. ‘’இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பின் இஸ்கான் ஆலயம் சென்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டார் ரிஷி சுனக்… 😍,’’ என்று இந்த பதிவின் தலைப்பில் எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என்று நம்பி பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
கடந்த அக்டோபர் 25ம் தேதியன்று ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக பதவியேற்றார். அதன் பிறகு ஏராளமான வீடியோ, புகைப்படங்கள் அவர் பற்றி பகிரப்படுகின்றன. அவற்றில் பலவும் பழைய நிகழ்வுகள் தொடர்பானவையாக உள்ளன. இருந்தபோதிலும், பலர் உண்மைத்தன்மை சரிபார்க்காமல் பழைய செய்தியை தற்போது நிகழ்ந்தது போலவே பகிர்வதால், சமூக வலைதள பயனாளர்கள் குழப்பமடைய நேரிடுகிறது. 

உண்மையில், மேற்கண்ட வீடியோவும், அதுதொடர்பான புகைப்படமும் கடந்த ஆகஸ்ட் 2022ல் எடுக்கப்பட்டதாகும். 2022 கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ரிஷி சுனக் தனது மனைவியுடன் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். அந்த காலகட்டத்தில் ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக தேர்வு செய்யப்படவே இல்லை. அதேசமயம், பிரதமர் பதவிக்கான போட்டியில் அவர் களம் கண்டிருந்தார். இதுகுறித்த புகைப்படத்தை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். 

ANl News Link 

எனவே, மேற்கண்ட வீடியோ பதிவு, ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு வரும் முன்பாக எடுக்கப்பட்டது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:பிரதமர் பதவியேற்ற பிறகு இஸ்கான் கோயில் சென்று ரிஷி சுனக் வழிபட்டாரா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: MISLEADING