ஐதராபாத் என்கவுன்டர் புகைப்படம் இதுவா?

இந்தியா சமூக ஊடகம்

‘’ஐதராபாத் என்கவுன்டர்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு புகைப்படத்தை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link Archived LinkIndiaGlitz Link Archived Link 

IndiaGlitz Tamil

இந்த ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளது. இதே செய்தியை தங்களது இணையதளத்திலும் பகிர்ந்துள்ளனர். ஆனால், இதில் உள்ள புகைப்படம் மட்டும் குழப்பமாக உள்ளது.

உண்மை அறிவோம்:
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் திஷா (பிரியங்கா ரெட்டி) என்பவர் கடந்த நவம்பர் 27ம் தேதி நள்ளிரவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்டார். இதன்பேரில், லாரி டிரைவர் முகமது ஆரிஃப் (26), நவீன், சிவா மற்றும் சென்னகேசவலு ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவருமே 20 முதல் 26 வயதுக்குள் உள்ளவர்கள் ஆவர். திஷாவை அடித்துக் கொன்றுவிட்டு, பலாத்காரம் செய்து பிறகு, சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக, அவர்கள் போலீசாரிடம் ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட 4 பேரையும் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று, டெமோ காட்டும்படி போலீசார் முயற்சி எடுத்தனர். இன்று (டிசம்பர் 6) குற்றவாளிகைளை அழைத்துச் சென்றபோது, அதில், ஆரிஃப் போலீசாரின் துப்பாக்கியை பறிமுதல் செய்து, போலீசாரை நோக்கி சுட்டுவிட்டு தப்ப முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார், அந்த 4 பேரையும் தற்காப்புக்காக சுட்டுக் கொன்றனர்.

The Hindu Link TOI Link TOI Link 1

இந்த செய்தி இந்தியா முழுக்க வைரலாகி வரும் நிலையில், இதுதொடர்பான புகைப்படம் எது என்று தெரியாமல் சிலர் தவறான புகைப்படங்களை பகிர்ந்து, ஃபேஸ்புக் பயனாளர்களை குழப்பி வருகின்றனர். இதன்படி, நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவலும் தவறான தகவல் இடம்பெற்றுள்ளது.

உண்மையில், இந்த புகைப்படம் கடந்த 2015ம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும். தமிழகத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் சிவப்பு சந்தன மரம் கடத்த முயன்றதாகக் கூறி ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை, தற்போதைய ஐதராபாத் என்கவுன்டருடன் தொடர்புபடுத்தி பகிர்ந்துள்ளனர். 

TOI Link The Hindu Link Indian Express Link 

இதுபற்றி நமது இந்தி மற்றும் மராத்தி மொழிப் பிரிவிலும் பிரத்யேக ஆய்வு செய்து, உண்மைத்தன்மையை வெளியிட்டுள்ளனர். அவற்றின் லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Marathi Fact Crescendo Link Hindi Fact Crescendo Link 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட செய்தியின் கன்டென்ட் உண்மை, ஆனால், அதுதொடர்பான புகைப்படம், ஃபேஸ்புக் வாசகர்களை குழப்புவதாக உள்ளது. எனவே, அது தவறு என தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள செய்தி உண்மை, தவறான புகைப்படம் என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஐதராபாத் என்கவுன்டர் புகைப்படம் இதுவா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Partly False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •