கொரோனா வைரஸ் பற்றி யுனிசெப் முன்னெச்சரிக்கை டிப்ஸ் எதுவும் வெளியிட்டுள்ளதா?

Coronavirus சமூக ஊடகம் மருத்துவம் I Medical

‘’கொரோனா வைரஸ் பற்றி யுனிசெப் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை டிப்ஸ்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டுள்ள பதிவு ஒன்ற காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link 

இந்த பதிவில், யுனிசெப் அறிவிப்பு என்று தலைப்பிட்டு, நிறைய முன்னெச்சரிக்கை டிப்ஸ்களை குறிப்பிட்டுள்ளனர். இவற்றை உண்மை என நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்ய தொடங்கியுள்ளனர்.

உண்மை அறிவோம்:
மேலே உள்ள ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ள முன்னெச்சரிக்கை குறிப்புகள் அனைத்தும் ஏற்கனவே ஆங்கிலத்தில் உலவிக் கொண்டிருப்பதுதான். அவற்றை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து தற்போது பகிர தொடங்கியுள்ளனர். உதாரணமாக ஒரு ஃபேஸ்புக் பதிவின் ஸ்கிரின்ஷாட்டை கீழே இணைத்துள்ளோம்.

ஆங்கிலத்தில் பகிரப்படும் இந்த வதந்தி பற்றி எமது இலங்கை குழுவினர் ஏற்கனவே யுனிசெப் பிரதிநிதிகளிடம் விசாரித்து, உண்மை அறிக்கையை செய்தியாக வெளியிட்டுள்ளனர். அதன் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

Fact Crescendo Srilanka News Link

இதற்கடுத்தப்படியாக, யுனிசெப் பெயரில் பகிரப்படும் இந்த முன்னெச்சரிக்கை டிப்ஸ்களை யாரும் நம்ப வேண்டாம் எனக் கூறி யுனிசெப் பிரெஞ்ச் மொழியில் எச்சரிக்கை வெளியிட்டிருக்கிறது. அதனையும் கீழே இணைத்துள்ளோம். 

UNICEF Twitter Link Archived Link 

உண்மையில், இதுதொடர்பாக யுனிசெப் வெளியிட்ட முன்னெச்சரிக்கை டிப்ஸ் பற்றி விரிவாக படிக்க கீழே தரப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

UNICEF Advisory on Coronavirus  Archived Link 

இதுதவிர மேற்குறிப்பிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ள டிப்ஸ் உண்மையா என பார்க்கலாம்.

1) கொரோனா வைரஸ் அளவில் பெரியது. அதனால் காற்றில் பரவ முடியாது. எனவே, முகமூடி அணிந்தால் போதும்இது தவறாகும். இருமல், சளித்தொற்று வழியாக கொரோனா வைரஸ் ஒருவருக்கு ஒருவர் பரவுகிறது. முகமூடி அணிவதால்கூட கொரோனாவை முற்றிலுமாக தடுக்க முடியாது.

2) உலோக பரப்புகளில் கொரோனா வைரஸ் விழுந்தால் 12 மணிநேரம் உயிர் வாழும். கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்கைகளை சுத்தமாக வைத்திருப்பது நல்ல விசயம்தான். ஆனால், கொரோனா வைரஸ் 12 மணிநேரம் உலோக பரப்பில் உயிர்வாழ முடியாது.

3) கொரோனா வைரஸ் பட்ட துணியை கழுவ வேண்டும் அல்லது சூரிய ஒளியில் 2 மணிநேரம் அந்த துணியை காட்டினால் கொரோனா வைரஸ் இறந்துவிடும்இது தவறான தகவல். கொரோனா வைரஸ் தற்போது வெயில் நிறைந்த நாடுகளில்தான் பரவ தொடங்கியுள்ளது. ஒருவேளை கோடைகாலத்தில் கொரோனா வைரஸ் பரவுவது தடைபடுகிறதா, இல்லையா என்பது இனிமேல்தான் தெரியவரும்.

4) வெந்நீர் அருந்த வேண்டும், ஐஸ்க்ரீம் உள்ளிட்ட குளிர்ந்த உணவுகளை சாப்பிடக்கூடாது. வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும்இதுவும் தவறுதான். இதுபற்றி உரிய ஆய்வு எதுவும் செய்து உறுதிப்படுத்தப்படவில்லை.

இதுதொடர்பாக, The Quint விரிவான ஆய்வு நடத்தி ஏற்கனவே செய்தி வெளியிட்டுள்ளது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

முன்னெச்சரிக்கையாக இருப்பதில் தவறில்லை. ஆனால், அதற்காக, யுனிசெப் பெயரில் தவறான சுற்றறிக்கை ஒன்றை பகிர்ந்து மற்றவர்களை குழப்புவது தவறான செயலாகும்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு நடத்திய ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கொரோனா வைரஸ் பற்றி யுனிசெப் முன்னெச்சரிக்கை டிப்ஸ் எதுவும் வெளியிட்டுள்ளதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False