இந்த முஸ்லீம் பெண் விநாயகர் சிலை வாங்குகிறாரா?- உண்மை இதோ!

அரசியல் சமூக ஊடகம்

‘’இந்த முஸ்லீம் பெண் விநாயகர் சிலை வாங்குகிறார்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

இதில், முஸ்லீம் பெண் ஒருவர் விநாயகர் சிலை விற்கும் இடத்தில் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ எப்போ விநாயகர் சதுர்த்தி வந்தாலும் இப்படி ஒரு பாயம்மா பிள்ளையார் செலவாங்க போறாங்க என்று போட்டோ போடும் சங்கிகளே. ஒரு நாளாவது ஒரு ரம்ஜான் பக்ரீத்துக்கு ஒரு மாமி பிரியாணி சாப்பிட்ட மாதிரி போட்டோ போடுங்க டா,’’ என எழுதியுள்ளனர்.

கிருஷ்ணவேல் டி எஸ் என்பவர் ஆகஸ்ட் 17, 2020 அன்று இதனை பகிர்ந்துள்ளார்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் பிரயோகிக்கப்பட்டுள்ள சொல்லாடலை பார்த்தால், இவர் பாஜகவினருக்கு அறிவுரை சொல்கிறாரா அல்லது யாரோ பாஜகவினர் பகிர்ந்த செய்தியை உண்மை என நம்பி பதிலுக்கு கேலி செய்கிறாரா என்று குழப்பம் எழுகிறது. சொல்ல வந்த விசயம் என்னவென்று, தெளிவாக இதில் குறிப்பிடவில்லை.

ஆனால், உண்மை என்னவெனில், இந்த புகைப்படம் சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய ஒரு சம்பவம் தொடர்பானதாகும்.

ஆம், பஹ்ரைனில் உள்ள Manama’s Juffair பகுதியில் செயல்படும் சூப்பர்மார்க்கெட்டிற்கு வந்த பெண் வாடிக்கையாளர் ஒருவர் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை எடுத்து கீழே போட்டு உடைத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கடந்த ஆகஸ்ட் 16, 2020 அன்று முதலாக வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, உடனே பஹ்ரைன் அரசு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது. போலீசாரும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Archived Link 

இதுபற்றி ஊடகங்களிலும் செய்தி வெளியாகியிருக்கிறது. சில செய்தி லிங்குகளை கீழே இணைத்துள்ளோம்.

IndiaToday Link I IndianExpress Link

எனவே, சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், அதுவும் மத ரீதியான குழப்பம் ஏற்பட வழிகோலும் சம்பவமான இதுபற்றி குழப்பமான வகையில், நடந்த உண்மையை மறைப்பது போல, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கமெண்ட் பகிர்ந்துள்ளதாக, தெரியவருகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில், தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:இந்த முஸ்லீம் பெண் விநாயகர் சிலை வாங்குகிறாரா?- உண்மை இதோ!

Fact Check By: Pankaj Iyer 

Result: False