
‘’கைலாசா ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள கரன்சி,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் புகைப்படம் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதில், கரன்சி நோட்டு ஒன்றின் புகைப்படத்தை இணைத்துள்ளனர். அதில், நித்யானந்தா உருவப்படம் உள்ளது. அத்துடன், 100, Nithyananda paramashivam, Reserve Bank of Kailasha, கைலாசாவின் ரிசர்வ் வங்கி, என்றெல்லாம் எழுதியுள்ளனர்.
இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்வதால், நாம் இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட கரன்சியை ஒருமுறை உற்று கவனித்தால் சில தவறுகள் அதில் உள்ளதை தெளிவாகக் காண முடியும். ஆம், நித்யானந்தா முழு பெயரை Nithyananda Paramashivam என்றில்லாமல், ‘Nithyananda paramashivam’ என தவறாகக் குறிப்பிட்டுள்ளனர். கைலாசா ஆங்கில ஸ்பெல்லிங் Kailasa என்பதற்கு பதிலாக, Kailasha என உள்ளது. அத்துடன், ‘கைலாசாவின் ரிசர்வ் வங்கி’ எனக் குறிப்பிட்டுள்ளதும் சந்தேகத்தை அதிகரிக்கிறது.

இதுதவிர விநாயகர் சதுர்த்தி (ஆக.,22, 2020) நாளில்தான் புதிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக நித்யானந்தா கூறியிருந்தார். அன்றைய தினம், கைலாசா நாட்டின் பொருளாதார கொள்கை, ரிசர்வ் வங்கி மற்றும் கரன்சி உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதுதொடர்பாக ஊடகங்களிலும் செய்தி வெளியாகியிருக்கிறது. அவற்றின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
Puthiyathalaimurai Link I Asianet Tamil Link
இப்படி ஒருவேளை கரன்சியை நித்யானந்தா அறிமுகம் செய்திருந்தால், அது மிகப்பெரிய விவாதமாக மாறியிருக்கும். அப்படி எந்த செய்தியும் ஊடகங்களில் வெளியாகவில்லை. நித்யானந்தாவின் அதிகாரப்பூர்வ யூடியுப் சேனல் மற்றும் ட்விட்டர் பக்கத்திலும் இப்படியான கரன்சி புகைப்படம் காணக் கிடைக்கவில்லை.
கூடுதல் விவரங்களுக்காக, நித்யானந்தாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://kailaasa.org/ வழியாக தொடர்புகொண்டு, இந்த கரன்சி உண்மையா, பொய்யா என விளக்கம் கேட்டோம். அதற்கு, ஊடகங்கள் உருவாக்கிய வதந்தி இது, என்று பதில் கிடைத்தது. அந்த பதிலை கீழே இணைத்துள்ளோம்.


எனவே, நித்யானந்தா பெயரை பயன்படுத்தி யாரோ ஒருவர் வேண்டுமென்றே இத்தகைய போலி கரன்சியை உருவாக்கி சமூக ஊடகங்களில் பகிர்ந்திருக்கிறார் என்றும், அதனைப் பலர் உண்மை என நம்பி பகிர்ந்து வருவதாகவும் தெரியவருகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால் +91 9049044263 என்ற எண்ணில் தகவல் தெரிவியுங்கள்.

Title:கைலாசா, நித்யானந்தா என்ற பெயரில் பரவும் போலி கரன்சி புகைப்படம்!
Fact Check By: Pankaj IyerResult: False
