ஆஸ்கர் யூடியுப் தளத்தில் ஜெய் பீம் படம்; தந்தி டிவி பெயரில் பரவும் போலியான செய்தி!

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

‘’5000 டாலர் கொடுத்து ஆஸ்கர் யூடியுப் சேனலில் ஜெய் பீம் படத்தை வெளியிட்ட சூர்யா,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049053770) அனுப்பி, உண்மையா என கேட்டிருந்தார். இந்த செய்தியை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர்.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
நடிகர் சூர்யா தயாரித்து, நடித்துள்ள ஜெய் பீம் என்ற படம், ஆஸ்கார் விருதுகள் 2022க்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, அந்த படம் பற்றிய அறிமுக வீடியோவை Oscars அதிகாரப்பூர்வ யூடியுப் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளனர்.

India Today Link I Indian Express Link

இதனை சூர்யா லஞ்சம் கொடுத்து வெளியிட்டுள்ளதாகச் சிலர் தகவல் பகிர்ந்து வருகின்றனர். முழு படமாக இல்லாமல், அந்த படத்தை பற்றிய அறிமுகத்திற்காக, 12 நிமிட காட்சிகளுடன் இந்த வீடியோ ஆஸ்கர் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதற்கான லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தந்தி டிவி லோகோவுடன் பகிரப்படும் மேற்கண்ட நியூஸ் கார்டு உண்மையா என அறிய, தந்திடிவி ஆசிரியர் குழுவை தொடர்பு கொண்டோம். இது போலியானது என்று கூறிய அவர்கள், இதுபற்றி ஏற்கனவே தந்தி டிவி தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளதாகவும், தெரிவித்தனர். அவர்கள் ட்விட்டரில் வெளியிட்ட மறுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Archived Link

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:ஆஸ்கர் யூடியுப் தளத்தில் ஜெய் பீம் படம்; தந்தி டிவி பெயரில் பரவும் போலியான செய்தி!

Fact Check By: Pankaj Iyer 

Result: False