
‘’பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் நடிகர்கள் கார்த்தி, சூர்யாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதில், புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்றையும், நடிகர்கள் கார்த்தி, சூர்யா நாட்டை விட்டே ஓட நேரிடும் என்று கூறி கல்யாணராமன் பெயரில் வெளியான ட்விட்டர் பதிவு ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டையும் இணைத்து பகிர்ந்துள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்கின்றனர்.
Facebook Claim Link 2 | Archived Link 2 |
Facebook Claim Link 3 | Archived Link 3 |
Facebook Claim Link 4 | Archived Link 4 |
உண்மை அறிவோம்:
EIA 2020 எனப்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் பற்றி நாடு முழுவதும் பெரும் விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக, தமிழ் சினிமா நடிகர் கார்த்தி வெளியிட்ட கருத்து பல தரப்பிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவரை தொடர்ந்து, அவரது சகோதரரும், சக நடிகருமான சூர்யாவும் EIA 2020 பற்றிய தனது கருத்தை வெளியிட்டிருந்தார்.
இதற்கிடையே, EIA 2020 பற்றி விமர்சித்து யூடியுப்பில் வீடியோ வெளியிட்ட ஒரு பெண்ணின் அலைபேசி எண், வீட்டு முகவரி உள்ளிட்டவற்றை கேட்டு பாஜகவை சேர்ந்த கல்யாண ராமன் என்பவர் ட்விட்டரில் பதிவு வெளியிட்டிருந்தார்.
கல்யாண ராமனின் இந்த பதிவு பல தரப்பிலும் விமர்சிக்கப்பட்டு வரும் சூழலில், நடிகர் கார்த்தி மற்றும் சூர்யாவும் கருத்து தெரிவித்ததால், அவர்களையும் கல்யாண ராமன் மிரட்டுவதாகக் கூறி சிலர் தகவல் பகிர்ந்தனர். அதில் ஒன்றுதான் மேற்கண்ட ட்விட்டர் பதிவின் ஸ்கிரின்ஷாட்டும்.
உண்மையில், கல்யாண ராமன் அப்படி எந்த மிரட்டலும், கார்த்தி மற்றும் சூர்யாவிற்கு விடவில்லை.
இதுதொடர்பாக, நமது நண்பர் ஒருவரின் உதவியுடன் கல்யாண ராமனை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம். அதற்கு அவர், இப்படி எந்த பதிவும் வெளியிடவில்லை என்று மறுப்பு தெரிவித்தார்.
மேலும், இதுபற்றி விளக்கம் அளித்து ட்விட்டரில் பதிவு ஒன்றையும் அவர் உடனடியாக வெளியிட்டார். தன்னைப் பற்றி திமுகவினர் இவ்வாறு தவறான தகவல் பகிர்வதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனவே, இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், கல்யாண ராமன் பற்றி போட்டோஷாப் செய்த தகவலை சிலர் பகிர்ந்து வருவதாக, தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவுகளில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் நடிகர்கள் கார்த்தி, சூர்யாவை மிரட்டினாரா?
Fact Check By: Pankaj IyerResult: False

பாஜகவுக்கு எப்ப எடுப்பா மாறினீங்க