
அமெரிக்கர்கள் ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா ஜபம் சொல்ல வேண்டும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
டொனால்ட் டிரம்ப் தான் கையெழுத்திட்ட ஒரு கோப்பைக் காட்டுகிறார். அதில், எக்ஸிகியூட்டிவ் ஆர்டர், ஒவ்வொரு குடிமகனும் ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா ஜெபத்தை ஜெபிக்க வேண்டும் என்று கையெழுத்திட்டதாக உள்ளது.
இந்த பதிவை Siva Murugan என்பவர் 2020 மார்ச் 27ம் தேதி வெளியிட்டுள்ளார். நிலைத் தகவலில், “எந்த மந்திரம் எந்த நாம ஜபம் காப்பாற்றும் என்று அமெரிக்க குடிமக்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆனை இடுகிறார் பாருங்கள்
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
Thanks you Mr.President” என்று குறிப்பிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அமெரிக்க அதிபர் டிஷர்ட்டை காட்டினால், ஃபைலை காட்டினால் அதில் தங்கள் இஷ்டத்துக்கு போட்டோஷாப்பில் எடிட் செய்து வாக்கியங்களை சேர்த்துப் பகிர்வது வாடிக்கையாக உள்ளது. டிரம்ப் இந்தியாவுக்கு வந்தபோது, அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இயேசு தேவை என்று டி-ஷர்ட்டை காட்டியதாக ஒரு வதந்தி பரவியது. இப்போது, கொரோனா உலகம் எங்கும் பரவி வரும் நிலையில் ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா என்று அமெரிக்கர்கள் ஜபம் செய்ய வேண்டும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக பகிர்ந்துள்ளனர்.
நமக்கு இது போலியானது என்று தெரிந்தாலும், பதிவைப் பகிர்ந்தவர்கள் மற்றும் கமெண்ட் செய்தவர்கள் இது உண்மை என்று நம்பி ஷேர் செய்திருப்பது தெரிந்தது. எனவே, உண்மை படத்தை தேடி ஆய்வு செய்தோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது பல ஆண்டுகளாக இந்த படத்தை பலரும் எடிட் செய்து பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. இதில் எது அசல், எது போலி என்று கண்டறிவதே மிகவும் சிக்கலானதாக இருந்தது.
Search Link |
தொடர்ந்து தேடியபோது மெக்சிகோ மக்கள் எல்லை தாண்டி அமெரிக்காவுக்குள் நுழைவதை தடுக்கும் மெக்சிகோ சிட்டி பாலிசி என்ற ஒரு பிரகடனத்தை டிரம்ப் செய்ததாக செய்திகள் கிடைத்தன. 2017ம் ஆண்டு அந்த செய்தி வெளியாகி இருந்தது. அதுதான் நம்முடைய தேடலில் பழைய தேதியாக இருந்தது.
அதை கீவேர்டாக பயன்படுத்தி தேடினோம். அப்போது இணையதளம் ஒன்றில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ளது போன்ற படம் கிடைத்தது.
ஆனால், அதில் ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா இல்லை. வால்ஸ்ட்ரீட் ஜேர்னலில் கூட இந்த படம் வெளியாகி இருந்தது. கூகுளில் அந்த படத்தை காண முடிந்தது, சந்தா இல்லாத காரணத்தால் அதை இணையதளத்தில் காண முடியவில்லை. எனவே, மற்ற ஊடகங்களில் வெளியான படத்தை பார்த்தோம்.
ncronline.org | Archived Link 1 |
archstl.org | Archived Link 2 |
அந்த படத்தின் கீழ் படத்தை எடுத்தது ராய்டர்ஸ் நிறுவனம் என்று குறிப்பிட்டிருந்தனர். இதன் அடிப்படையில் ராய்டர்ஸ் இணையளத்துக்கு சென்று குறிப்பிட்ட படத்தை தேடினோம். 2017 ஜனவரி 23ம் தேதி இந்த படத்தை அவர்கள் பதிவேற்றம் செய்திருந்திருந்தனர். அதில், மெக்சிகோ மக்கள் கொள்கை தொடர்பாக டிரம்ப் தன்னுடைய எக்ஸிகியூட்டிவ் ஆர்டரை வெளியிட்டபோது எடுத்தது என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதன் மூலம் 2017ல் வெளியான புகைப்படத்தை எடிட் செய்து தவறான தகவல் சேர்த்து வெளியிட்டிருப்பது உறுதியானது. இதன் அடிப்படையில் அமெரிக்கர்கள் ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா என்று ஜெபிக்க வேண்டும் என்று டிரம்ப் உத்தரவிட்டதாக பகிரப்படும் படம் மற்றும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:அமெரிக்கர்கள் ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா ஜபம் செய்ய டிரம்ப் உத்தரவிட்டாரா?
Fact Check By: Chendur PandianResult: False

Of course it’s fake you fucking red scum, it was a fucking meme. Hope you die, drav scum