இத்தாலியில் கிறிஸ்தவ ஆலயத்திற்கு விநாயகர் சிலை எடுத்துச் செல்லப்பட்டதா?

Coronavirus சமூக ஊடகம் சர்வதேசம்

இத்தாலியில் கிறிஸ்தவ ஆலயத்திற்குள் விநாயகர் சிலை கொண்டு செல்லப்பட்டதாக ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Archived Link 2

கிறிஸ்தவ ஜாமக்காரன் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 மார்ச் 27ம் தேதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. 1.26 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றுக்குள் விநாயகர் சிலை கொண்டு செல்லப்படுகிறது.

நிலைத் தகவலில், “இத்தாலி தேசத்தின் மீது ஏன் கர்த்தருடைய கோபம் கடுமையாய் உள்ளது?” என்று குறிப்பிட்டுள்ளனர். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கொரோனா வைரஸ் காரணமாக உலகமே தடுமாறிக்கொண்டிருக்கிறது. அதிக அளவில் இத்தாலியில் உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன. உலகத்திலேயே அதிகமாக இத்தாலியில்தான் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழப்பு 10 ஆயிரத்தைக் கடந்ததாக அதிர்ச்சியூட்டும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் இத்தாலி திணறி வருகின்றன. இந்த நிலையில் இத்தாலி நாட்டின் மீது கடவுளின் கோபம் அதிகமாக இருக்க காரணம் என்று வீடியோவை வெளியிட்டுள்ளனர். 

edition.cnn.comArchived Link

உண்மையில் கடவுளின் கோபம் அதிகமாக இதுதான் காரணமா என்று நாம் ஆய்வு செய்யவில்லை. அது அவரவர் மதம் சார்ந்த நம்பிக்கை… நம்பிக்கை சார்ந்த விஷயம் சரியா, தவறான என்று ஆய்வு செய்யவில்லை. இந்த சம்பவம் இத்தாலியில் நடந்ததா என்று மட்டுமே ஆய்வு செய்தோம்.

வீடியோவில் உள்ள காட்சிகளை புகைப்படமாக மாற்றி ஆய்வு செய்தோம். அப்போது ஸ்பெயின் நாட்டில் இந்த சம்பவம் நடந்ததாக பல செய்திகள் மற்றும் வீடியோ நமக்கு கிடைத்தன. ஸ்பெயின் நாட்டில் ஒரு தேவாலயத்துக்குள் விநாயகர் சிலை கொண்டு செல்லப்பட்டது என்று வெளியான வீடியோவும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவும் ஒன்று என்பது தெரிந்தது.

cruxnow.coArchived Link 1
hinduexistence.orgArchived Link 2

இத்தாலியில் கிறிஸ்தவ ஆலயத்துக்குள் விநாயகர் சிலை கொண்டு செல்லப்பட்டதா என்று அறிய கூகுளில் தேடினோம்.

ஸ்பெயினில் நடந்த நிகழ்வைத் தவிர வேறு எந்த ஒரு செய்தியும் படமும் நமக்கு கிடைக்கவில்லை. இதன் அடிப்படையில் இத்தாலியில் ஒரு கிறிஸ்தவ ஆலயத்துக்குள் விநாயகர் சிலை கொண்டு செல்லப்பட்டது எனும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:இத்தாலியில் கிறிஸ்தவ ஆலயத்திற்கு விநாயகர் சிலை எடுத்துச் செல்லப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •