விராட் கோலி மைதானத்தில் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்தாரா?

அரசியல் | Politics விளையாட்டு

‘’விராட் கோலி மைதானத்தில் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்தார்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் ஃபேஸ்புக் பதிவுகளை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link 1Archived Link 
Facebook Claim Link 2Archived Link 

இதேபோன்ற பதிவை மேலும் பலர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்ததை காண நேரிட்டது. 

உண்மை அறிவோம்:
இந்தியா முழுவதும் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள புதிய குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்த பெண்களை போலீசார் கைது செய்தனர். இதன்பேரில் பலரும் கோலம் போடும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  

தற்போது இந்த போராட்டம், தமிழகத்தில் இருந்து ஆந்திராவிற்கும் பரவியுள்ளது. இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இத்தகைய அரசியல் சூழலில், ஜனவரி 5ம் தேதி, இந்தியா – இலங்கை இடையே குவாஹாட்டியில் நடைபெறவிருந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

இந்த போட்டி தொடங்கும் முன்பாக, மைதானத்தின் ஈரப்பதத்தை, இந்திய அணி கேப்டன் விராட் கோலி பார்வையிட்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் மேலே உள்ள ஃபேஸ்புக் பதிவுகளில் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. 

Archived Link

விளையாட்டிற்கு இப்படியான புகைப்பட பதிவை சிலர் பகிர்ந்திருந்தாலும் அல்லது வேண்டுமென்றே இப்படி செய்திருந்தாலும் சமூக ஊடக வாசகர்கள் இதன் உண்மைத்தன்மை அறியாமல் குழம்பும் நிலை உள்ளது.

நடப்பு அரசியல் சூழல் குறிப்பாக, சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்களால் நாடு முழுவதும் ஒருவித பதற்றமான நிலவரத்தை ஏற்பட்டுள்ள நிலையில், கோலியும் கோலம் போட்டார் என பகிரப்பட்ட போலியான புகைப்படம் அரசியல் சார்ந்த ஒன்றாகவே கருதப்படுகிறது. பொதுவான ஒரு விசயத்தில் வேண்டுமென்றே தங்களது சுய அரசியல் கருத்தை வலிந்து திணிப்பதைப் போல இது உள்ளதாக, உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் புகைப்படம் போலியான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:விராட் கோலி மைதானத்தில் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்தாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False