FactCheck: ஹெச்டிஎப்சி வங்கி 2021ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை இல்லை என்று கூறியதா?

இந்தியா | India சமூகம் தமிழ்நாடு | Tamilnadu

‘’ஹெச்டிஎப்சி வங்கி 2021ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க மறுக்கிறது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்: 

இந்த விளம்பர புகைப்படத்தை வாசகர் ஒருவர் என்ற நமது +91 9049053770 வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக்கில் பலரும் இதனை ஷேர் செய்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link 

உண்மை அறிவோம்:
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, 2020-21 கல்வியாண்டில் தமிழ்நாட்டில் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பை மாநில அரசு அமல்படுத்தியது.

TheNewsMinute Link I EconomicTimes Link

இதன் அடிப்படையில், 2021ல் தேர்ச்சி பெற்றவர்கள் திறமை இல்லாதவர்கள் என்றும், கொரோனா பேட்ச் என்றும், அவர்களுக்கு வேலை கிடைக்காது என்றும் கூறி பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த விமர்சனத்திற்கு வலு சேர்க்கும் வகையில், சமீபத்தில் ஹெச்டிஎப்சி வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், 2021ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்த நேர்காணலில் அனுமதி இல்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது பல்வேறு தரப்பிலும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், இந்த அறிவிப்பு பற்றி ஊடகங்களுக்கு விளக்கம் அளித்த ஹெச்டிஎப்சி வங்கி, இது ஒரு அச்சுப் பிழை என்றும், உள்நோக்கம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

Archived Link

இதுபற்றி ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது. அந்த லிங்கை கீழே இணைத்துள்ளோம்.

DNA India Link I India.com Link I Zee News Link

எனவே, ஹெச்டிஎப்சி வங்கியின் மேற்கண்ட அறிவிப்பு பற்றி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவலில் முழு உண்மையில்லை என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:ஹெச்டிஎப்சி வங்கி 2021ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை இல்லை என்று கூறியதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Misleading