FACT CHECK: சீனாவின் மழை வெள்ளம் என்று பகிரப்படும் ஜப்பான் சுனாமி வீடியோ!

சமூக ஊடகம் சமூகம் சர்வதேசம்

சீனாவில் ஏற்பட்ட பெருமழை வெள்ள காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

ஆற்றில் வெள்ளம் அடித்து வருவது போன்ற வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஆற்றில் இருந்த படகுகள், சிறிய கப்பல்கள் எல்லாம் அடித்துச் செல்லப்படுகின்றன. நிலைத் தகவலில், “பயத்தின் உச்சத்தில் சீனா… வரலாறு காணாத மழை. இதன் காரணமாக The Gorges Dam முழுமையாக நிரம்பிவிட்டது” என்று சற்று நீண்ட தகவல் வெளியாகி இருந்தது.

இந்த பதிவை Sheikabdul Kadher என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2021 ஆகஸ்ட் 3ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஒவ்வொரு ஆண்டும் இயற்கை சீற்றத்துக்கு பலியாகும் நாடு சீனா. சீனாவில் பெய்யும் கன மழை காரணமாக அணைகள் நிரம்பி, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுவது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இவ்வொரு ஆண்டும் சீனாவின் மழை வெள்ள பாதிப்பு என்று சில வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. சில பழைய வீடியோக்களை எடுத்து சீன வெள்ள பாதிப்பு என்று சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். அவ்வப்போது இது பற்றி நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டு வருகிறோம்.

ஃபேக்ட் கிரஸண்டோ கட்டுரை 1

ஃபேக்ட் கிரஸண்டோ கட்டுரை 2

அசல் பதிவைக் காண: theatlantic.com I Archive

இந்த நிலையில் ஜப்பானில் 2011ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி வீடியோவை எடுத்து 2021 சீன வெள்ள பாதிப்பு என்று சிலர் பதிவிட்டு வருகின்றனர். எனவே, இந்த வீடியோ ஜப்பான் சுனாமி வீடியோ என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வை நடத்தினோம். வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, ஜப்பான் சுனாமி என்று குறிப்பிட்டு பல வீடியோக்கள் யூடியூப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என பல சமூக ஊடக பக்கங்களில் வெளியாகி இருப்பதை காண முடிந்தது. 

இதன் மூலம் இந்த வீடியோ 2021ல் சீனாவில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில், சீனாவில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு என்று பகிரப்படும் வீடியோ தவறானது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சீனாவில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு என்று பகிரப்படும் வீடியோ 2011ல் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியின் போது எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:சீனாவின் மழை வெள்ளம் என்று பகிரப்படும் ஜப்பான் சுனாமி வீடியோ!

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •