
‘‘கோயிலுக்குச் சென்ற திரிஷா, விஜய்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ஏம்மா த்ரிஷா, விஜய வெளிய வரச்சொல்லுங்கன்னு சொல்லவும், கோபமா வெளிய கூட்டி வந்துட்டியா?’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனுடன் சமந்தா, த்ரிஷா, விஜய் ஒன்றாக நிற்பது போன்ற புகைப்படம் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.
உண்மை அறிவோம்:
சில நாட்கள் முன்பாக, பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன் தவெக தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷாவை தொடர்புபடுத்தி, கருத்து கூறியிருந்தார். இது பல்வேறு தரப்பிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நாம் கூட அதுபற்றி ஃபேக்ட்செக் செய்துள்ளோம்.
அந்த வரிசையில் தற்போது விஜய் மற்றும் நடிகை திரிஷா கோயிலுக்குச் சென்றதாகக் கூறி, புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இதுபோன்று எந்த ஒரு செய்தியும், புகைப்படமும் சமீபத்தில் வெளியாகவில்லை, என்று தெரியவந்தது.
தொடர்ந்து விவரம் தேடியபோது, திருப்பதி சென்றதாக, திரிஷா அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவு வெளியிட்டிருந்தார். ஆனால், அந்த புகைப்படமும், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படமும் வெவ்வேறாக உள்ளது.

அடுத்தப்படியாக, நடிகை சமந்தாவை கேலி செய்யும் நோக்கில் Naga Chaitanya Fans Club என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளனர். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

அடுத்தப்படியாக, தவெக., தலைமைக் கழகத்திலும் இதுபற்றி பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் போலியானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
Title:கோயிலுக்குச் சென்ற திரிஷா, விஜய் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: Altered


