‘பொங்கல் பரிசு வாங்கும் வன்னியர்கள் என் மூஞ்சில முழிக்க வேண்டாம்’ என்று அன்புமணி கூறினாரா?

அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

‘‘பொங்கல் பரிசு வாங்கும் வன்னியர்கள் என் மூஞ்சில முழிக்க வேண்டாம்’’ என்று அன்புமணி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ பொங்கல் பரிசு – அன்புமணி விமர்சனம்! பொங்கலுக்கு அரசு தரும் 3000 பணத்தை வாங்குகிற வன்னியர்கள் இனி என் மூஞ்சில முழிக்க வேண்டாம்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link  

News 7 Tamil லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது எடிட் செய்து, பகிரப்படும் வதந்தி, என்று தெரியவந்தது. 

News7 Tamil Link 

இதுதொடர்பாக, நாம் News 7 Tamil ஆசிரியர் குழுவிலும் பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு, எடிட் செய்யப்பட்டது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘பொங்கல் பரிசு வாங்கும் வன்னியர்கள் என் மூஞ்சில முழிக்க வேண்டாம்’ என்று அன்புமணி கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer  

Result: Altered