‘‘விஷால் மற்றும் லஷ்மி மேனன் விரைவில் திருமணம்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’விஷால் மற்றும் லஷ்மி மேனன் விரைவில் திருமணம்’’, என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

Facebook Claim Link l Archived Link

உண்மை அறிவோம்:

மேற்கண்ட வகையில் கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்படுகிறது. ஆனால், ‘’இதில் எந்த உண்மையும் இல்லை; ஒரு பெண்ணின் வாழ்க்கையை பாதிக்கும் வகையிலான இத்தகைய வதந்தியை யாரும் பரப்பாதீர்கள்,’’ என்று குறிப்பிட்டு நடிகர் விஷால் உடனடியாக ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதனைக் கீழே இணைத்துள்ளோம்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி தவறான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:விஷால் மற்றும் லஷ்மி மேனன் விரைவில் திருமணம் என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

Written By: Fact Crescendo Team

Result: False