நரேந்திர மோடி அமைச்சரவையில் உளவு மற்றும் ரகசிய கேமரா பதிவுத்துறை அமைச்சராக அண்ணாமலை நியமனம் என்று ஒரு நியூஸ் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Annamalai 2.png

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சன் நியூஸ் வெளியிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவை நியூஸ் கார்டில் அண்ணாமலைக்கும் அமைச்சர் பதிவு அளித்தது போன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், "அண்ணாமலை உளவு மற்றும் ரகசிய கேமரா பதிவுத்துறை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், "மோடி அரசு அதிரடி... அண்ணாமலைக்கு புதிய அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது.. ரகசிய கேமரா பதிவுத்துறை அமைச்சராகிறார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கோவை நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை. தோல்வி அடைந்தாலும் அவர் மத்திய அமைச்சராக போகிறார் என்று பாஜக-வினர் சமூக ஊடகங்களில் தகவல் பரப்பினர். ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அதே போல் தங்களுக்கு பிடிக்காத நிர்வாகிகளின் ரகசிய வீடியோ, ஆடியோக்களை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் குழுவினர் எடுத்து வௌியிடுவதாக சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மற்றவர்களை உளவு பார்க்கவும் ரகசிய கேமரா மூலம் பதிவு செய்யவும் அண்ணாமலைலயை அமைச்சராக நரேந்திர மோடி நியமித்தது போன்று நையாண்டி பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

நையாண்டிக்காகப் போட்ட பதிவு போல இருந்தாலும், இதை சன் நியூஸ் டிவி-யே வெளியிட்டது போன்ற தோற்றத்தை இந்த பதிவு ஏற்படுத்துகிறது. எனவே, இது தொடர்பாக இந்த நியூஸ் கார்டை ஆய்வு செய்தோம்.

முதலில் சன் நியூஸ் தொலைக்காட்சி இப்படி ஒரு நியூஸ் கார்டை வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தை பார்த்தோம். மத்திய அரசின் புதிய அமைச்சரவை தொடர்பாக நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு வடிவமைப்பில் சன் நியூஸ் தொலைக்காட்சி பதிவுகளை வெளியிட்டிருப்பது தெரிந்தது. ஆனால், அண்ணாமலை புகைப்படத்துடன் பதிவு எதையும் காணவில்லை.

Annamalai 3.png

சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டை எடிட் செய்து தவறான தகவலை சேர்த்துப் பகிர்ந்திருப்பது இதன் மூலம் உறுதியானது. இதை உறுதிசெய்துகொள்ள சன் நியூஸ் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் மனோஜின் வாட்ஸ்அப் எண்ணுக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் உளவு மற்றும் ரகசிய கேமரா பதிவுத் துறையின் அமைச்சராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார் என்று சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மேற்கண்ட நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:உளவு மற்றும் ரகசிய கேமரா பதிவு அமைச்சராக அண்ணாமலை நியமனம் என்று பரவும் விஷமச் செய்தி!

Written By: Chendur Pandian

Result: False