FactCheck: கமல்ஹாசன் தாக்கியதால் காயமடைந்த பெண் உதவியாளர் இவரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’கமல்ஹாசன் தாக்கியதால் காயமடைந்த பெண் உதவியாளர்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

நியூஸ்7 தமிழ் டிவியின் லோகோவுடன் கூடிய மேற்கண்ட நியூஸ் கார்டை வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய கேட்டுக் கொண்டனர்.

இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது பலரும் ஷேர் செய்வதைக் கண்டோம்.

Facebook Claim LinkArchived Link

உண்மை அறிவோம்:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தொடங்கி, கடந்த ஏப்ரல் 6ம் தேதியன்று வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள் மே 2, 2021 அன்று அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில், கடந்த மார்ச் 29, 2021 அன்று கமல்ஹாசன் புதுச்சேரி பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது, பிரசார வேனில் பயன்படுத்தும் மைக் வேலை செய்யாத காரணத்தால், அவர் ஆத்திரமுற்று, கையில் இருந்த டார்ச் லைட்டை வேனிற்குள் வீசினார்.

Freepressjournal Link Etv bharat LinkDinasuvadu.com Link

கமல்ஹாசன் வேனிற்குள் டார்ச்லைட் வீசியதில் யாரும் காயமடையவில்லை என்றாலும், இதில், அவரது பெண் உதவியாளர் காயமடைந்துவிட்டதாகக் கூறி சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது.

அப்படி பகிரப்படும் தகவல்களில் ஒன்றுதான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ளதும். உண்மையில், அது நியூஸ்7 தமிழ் ஊடகத்தின் பெயரில் பகிரப்பட்டு வரும் போலியான செய்தியாகும்.

இதுபற்றி நியூஸ் 7 தமிழ் டிவியின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சுகிதாவிடம் பேசி நாம் உறுதிப்படுத்தியுள்ளோம்.

இது மட்டுமல்ல, நியூஸ்7தமிழ், புதிய தலைமுறை என பல்வேறு ஊடகங்களின் லோகோ வைத்து, இந்த போலிச் செய்தியை சிலர் வேண்டுமென்றே பரப்பி வருவதையும் கண்டோம். 

Facebook Claim LinkArchived Link 

ஆனால், இவை எல்லாமே போலிச் செய்திகள்தான். இதுபற்றி மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் மவுரியா ஏற்கனவே அவரது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கிறார்.

இதுகுறித்து ஊடகங்களிலும் அப்போதே செய்தி வெளியாகியுள்ளது. அந்த லிங்கையும் கீழே இணைத்துள்ளோம்.

இது மட்டுமல்ல, இவர்கள் பகிர்ந்துள்ள பெண்ணின் புகைப்படம், இணையதளத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் ஸ்டாக் வகையை சேர்ந்த புகைப்படமாகும்.  

Alamy.com search Link

எனவே, இணையதளத்தில் கிடைக்கும் ஒரு புகைப்படத்தை எடுத்து, கமல்ஹாசனுடன் தொடர்புபடுத்தி தவறான தகவல் பகிர்ந்துள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:கமல்ஹாசன் தாக்கியதால் காயமடைந்த பெண் உதவியாளர் இவரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False