FACT CHECK: கர்நாடகாவில் மாஸ்க் அணியாததால் லஞ்சம் கேட்ட போலீஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா?

இந்தியா சமூக ஊடகம் சமூகம்

கர்நாடகாவில் முகக் கவசம் அணியாததற்கு ரூ.1000 லஞ்சம் கேட்ட போலீசார் மீது பொது மக்கள் தாக்குதல் நடத்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

போலீசாரை விரட்டி விரட்டி தாக்கும், போலீஸ் வாகனம் மீது பொது மக்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கர்நாடகவில் முக கவசம் அணியாததற்க்கு 1000 ருபாய் தண்டம் கேட்ட காவல் துறைக்கு எதிராக கொதிப்படைந்த மக்கள்.. இவர்களின் இந்த ஆட்சியாளர்களின் தவருகளுக்கு யார் அபராதம் கேட்பார்கள். மக்கள் வரியில் வாழும் இந்த முதலைகள் மீண்டும் மக்களிடம் தண்டம் கேட்டால்?!. மக்கள் புரட்சி ஒன்றே அடிமை விலங்கை உடைக்கும் …” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ பதிவை Jeawul Megrus என்பவர் 2021 ஏப்ரல் 26 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொது மக்கள் ஒவ்வொருவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் மாஸ்க் அணிய முடியாது என்று பலரும் வம்பு செய்வதைக் காண முடிகிறது. அதே நேரத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைக்காக ஆயிரக் கணக்கானோர் மருத்துவமனை வாசல்களில் காத்திருக்கும் சோக நிகழ்வையும் பார்த்து வருகிறோம்.

இந்த சூழலில், கர்நாடகாவில் மாஸ்க் அணியாததற்காக போலீஸ் ரூ.1000 அபராதம் விதித்ததாகவும், இதனால் கொதிப்படைந்த மக்கள் போலீசார் மீது தாக்குல் நடத்தியதாகவும் வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது. எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.

வீடியோவை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். வேறு வேறு புகைப்படங்களை வேறு வேறு தேடு தளங்களில் பதிவேற்றித் தேடினோம். அப்போது கர்நாடகாவின் மைசூரில் நடந்த கொடிய விபத்து என்று ஒரு யூடியூப் வீடியோ கிடைத்தது. அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பதிவில் இடம் பெற்ற காட்சி இருந்தது. எனவே, இதன் அடிப்படையில் கூகுளில் வேறு வேறு கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது 2021 மார்ச் மாதம் 22ம் தேதி இந்த வீடியோ எடுத்திருப்பது தெரிந்தது.

இது தொடர்பாக நமக்கு கிடைத்த செய்தியில், “சம்பவத்தன்று போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் போலீசாரிடம் சிக்காமல் இருக்க வண்டியைத் திருப்பியுள்ளார். ஆனால் அந்தப் பக்கத்தில் மறைந்திருந்த மற்றொரு போலீசார் இருசக்கர வாகனத்தில் வந்தவரைப் பிடிக்க வந்துள்ளார்.

இதனால் நிலை தடுமாறி லாரி ஒன்றில் விபத்தில் சிக்கி அந்த நபர் உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் நடந்த விபத்துக்கு போலீஸ்தான் காரணம் என்று கூறி அவர்களைத் தாக்கினர்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: starofmysore.com I Archive 1 I thenewsminute.com I Archive 2

இதன் மூலம் கர்நாடகத்தில் முகக் கவசம் அணியாதவர்களிடம் ரூ.1000ம் அபராதம் அல்லது லஞ்சம் கேட்ட போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

டெல்லியில் லவ் ஜிகாத் செய்து இந்து பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த இஸ்லாமியர் என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:கர்நாடகாவில் மாஸ்க் அணியாததால் லஞ்சம் கேட்ட போலீஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: Misleading

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •