“பிடித்த கம்ப்யூட்டர் மொழி சமஸ்கிருதம்” என்று கல்கோடியாஸ் பல்கலைக்கழக மாணவர் கூறினாரா?

False இந்தியா | India சமூகம் சார்ந்தவை I Social

பிடித்த கம்ப்யூட்டர் மொழி எது என்று கேட்டபோது கல்கோடியாஸ் பல்கலைக்கழக மாணவர் சமஸ்கிருதம் என்று கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நியூஸ் கார்டு வடிவில் பதிவு வெளியாகி உள்ளது. அதில், “பிடித்த கம்ப்யூட்டர் LANGUAGE எது? சமஸ்கிருதம் என பதிலளித்த வடமாநில மாணவன்!” “உத்திரபிரதேசம் GALGOTIAS UNIVERSITY-யை சேர்ந்த ஒரு மாணவர், டெல்லியில் நடைபெற்ற AI IMPACT மாநாட்டில் கலந்துகொண்டார். அங்கு நடந்த நேர்காணலில், “உங்களுக்கு மிகவும் பிடித்த கம்ப்யூட்டர் லேங்க்வேஜ் எது?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அந்த மாணவர் தன்னம்பிக்கையுடன் “சமஸ்கிருதம்” என பதிலளித்தார். இந்த பதில் அங்கு இருந்தவர்களை ஆச்சரியப்படுத்தியதோடு, சமூக வலைதளங்களிலும் வேகமாக வைரலாகி வருகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாநாடு ஒன்றை டெல்லியில் இந்திய அரசு நடத்தியது. இதில் சீனாவிலிருந்து வாங்கப்பட்ட ரோபோவை கல்கோடியாஸ் பல்கலைக் கழகம் காட்சிக்கு வைத்திருந்தது மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அந்த பல்கலைக் கழக மாணவர் ஒருவரிடம் பிடித்த கம்ப்யூட்டர் மொழி எது என்று கேட்டபோது அவர் சமஸ்கிருதம் என்று பதில் அளித்ததாக பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம். நியூஸ் கார்டில் இடம் பெற்றிருந்த காட்சியை கூகுல் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடியபோது அந்த வீடியோ நமக்குக் கிடைத்தது. அதில் கல்கோடியாஸ் பலகலைக் கழக மாணவர் ஒருவர் வேலைக்கான நேர்காணலில் அளித்த பதில் என்று குறிப்பிட்டிருந்தனர். உண்மை வீடியோவை கண்டறியத் தொடர்ந்து தேடினோம். அப்போது இந்த வீடியோவை ஸ்ரேயாஸ் மனோகர் (Shreyas Manohar) என்ற ஸ்டாண்டப் காமெடியன் ஒருவர் பிப்ரவரி 9, 2026ல் இந்த வீடியோவை பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. 

ஏஐ மாநாடு பிப்ரவரி 16ம் தேதி தான் தொடங்கியது. அந்த மாநாட்டில் சீனாவின் ரோபோவை தங்களுடைய கண்டுபிடிப்பாக கல்கோடியாஸ் பல்கலைக் கழகம் வைத்திருந்தது பிரச்னை ஆன நிலையில் அந்த ஸ்டாண்ட் அப் காமெடியன் ஸ்ரேயாஸ் மனோகர் தன்னுடைய அந்த பழைய வீடியோவை எடிட் செய்து கல்கோடியாஸ் பல்கலைக்கழக மாணவர் பதில் என்று மாற்றி பிப்ரவரி 19ம் தேதியும் பதிவிட்டிருந்தார்.

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதே வீடியோவை அவர் பதிவிட்டிருந்தார். அதில். “(நகைச்சுவைக்காக)இந்தியா ஏஐ சம்மிட் 2026 இல் ஒரு வேலை நேர்காணலில் கல்கோடியாஸ் பல்கலைக்கழக மாணவர் கலந்து கொண்ட காட்சிகள் கசிந்தன (நகைச்சுவை) என்று குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் இது நையாண்டிக்காக வெளியிடப்பட்ட வீடியோ என்பது தெளிவாகிறது. 

எல்லோரும் கல்கோடியாஸ் பல்கலைக் கழகத்தை விமர்சித்து வரும் சூழலில், அந்த பல்கலைக் கழகத்தை நையாண்டி செய்யும் வகையில் தற்போதுள்ள சூழலை பயன்படுத்தி அதிக வீயூஸ் பெறுவதற்காக இவர் பழைய வீடியோவை கல்கோடியாஸ் பெயரில் வெளியிட்டு பிரபலப்படுத்தி வருவது தெரிகிறது.

உண்மைப் பதிவைக் காண: instagram.com I Archive

இந்த வீடியோ ஏஐ மாநாடு நடப்பதற்கு முன்பாகவே யூடியூபில் வெளியாகி உள்ளது. வீடியோவில் உள்ள நபர் தான் ஒரு ஸ்டாண்டப் காமெடியன் என்று தெரிவித்துள்ளார். அவரது சமூக ஊடக பக்கங்களில் பல ஆண்டுகளாக அவர் ஸ்டாண்டப் காமெடி செய்து வந்திருப்பதைக் காண முடிகிறது. மேலும், இது நையாண்டிக்காக என்று அவர் உறுதி செய்துள்ளார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் தனக்கு பிடித்த கம்ப்யூட்டர் மொழி சமஸ்கிருதம் என்று கல்கோடியாஸ் பல்கலைக் கழக மாணவர் கூறியதாக பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கல்கோடியாஸ் பல்கலைக் கழகம் சீனாவின் ரோபோவை தங்களுடைய கண்டுபிடிப்பாக வைத்து தலைக்குனிவு ஏற்படுத்திய நிலையில் அந்த பலகலைக் கழகத்தை நையாண்டி செய்யும் வகையில் ஸ்டாண்ட் அப் காமெடியன் ஒருவர் வெளியிட்டிருந்த வீடியோவை உண்மை என்று கருதி பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:“பிடித்த கம்ப்யூட்டர் மொழி சமஸ்கிருதம்” என்று கல்கோடியாஸ் பல்கலைக்கழக மாணவர் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply