
‘‘மணிப்பூர் வன்முறை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
Tweet Claim Link l Archived Link
பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பட்டியல் பழங்குடி (எஸ்டி) பிரிவில் மெய்தேயி சமூகத்தை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நான்கு வாரங்களுக்குள் பரிசீலிக்குமாறு மணிப்பூர் உயர் நீதிமன்றம் 2023, ஏப்ரல் 19 ஆம் தேதியன்று மாநில அரசைக் கேட்டுக் கொண்டது. மத்திய அரசின் பரிசீலனைக்கு இதை அனுப்புமாறு நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் மே 3, 2023 அன்று தலைநகர் இம்ஃபாலில் இருந்து 65 கிமீ தொலைவில் உள்ள சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள டோர்பாங் பகுதியில் ‘பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு’ பேரணிக்கு ஏற்பாடு செய்தது. இந்தப்பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது தொடங்கி, படிப்படியாக அம்மாநிலம் முழுக்க வன்முறை வெடித்துள்ளது.
இதையடுத்து, மணிப்பூர் முழுக்க பல இடங்களில் கட்டுக்கடங்காத வன்முறை அரங்கேறி வருகிறது. இதனால், கலவரக்காரர்களை பார்த்தவுடனே சுடும்படி உத்தரவு ஒன்றும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
bbc tamil link I maalaimalar link l hindutamil link
இந்த சூழலில்தான் மேற்கண்ட வகையில் மணிப்பூரில் கண்மூடித்தனமான வன்முறை நிகழ்வதாகக் கூறி வீடியோ ஒன்றை சிலர் பகிர்ந்து வகின்றனர். ஆனால், உண்மையில் இது ஒரு வீடியோ கேம் காட்சியாகும்; உண்மையானதல்ல. இதற்கும், மணிப்பூர் நிலவரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
இதுபற்றி இந்திய ராணுவமும் ஏற்கனவே விளக்கம் அளத்துள்ளது.
கூடுதலாக, நமது அசாம் மொழி பிரிவினர் தெளிவாக ஃபேக்ட்செக் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதனை கீழே இணைத்துள்ளோம்.
FactCrescendo Assamese link
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் போலியான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:மணிப்பூர் வன்முறை என்று பகிரப்படும் வீடியோ கேம் பதிவால் சர்ச்சை…
Fact Check By: Fact Crescendo TeamResult: False
