
மாதம் ரூ.50 லட்சத்திற்கு அடமானம் வைக்கப்பட்ட விகடன் குழுமம் என்று குறிப்பிட்டு இந்தியா டுடே தமிழ் அட்டைப்பட செய்தி வெளியிட்டதாக, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவலை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது பலரும் இதனை உண்மை போல சமூக வலைதளங்களில் பகிர்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
இந்தியா டுடே ஊடகம் தனது தமிழ்ப் பதிப்பை நிறுத்தி, சுமார் 7 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த சூழலில், இந்தியா டுடே ஊடகம் இப்படி ஒரு அட்டைப்படச் செய்தி வெளியிட்டதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படுவதால், பெரும் சர்ச்சை எழுந்தது. ஆனால், இதுபற்றி இந்தியா டுடே ஆசிரியர்கள் குழுவினரிடம் விசாரித்தபோது, ‘’இந்த செய்தியை நாங்கள் வெளியிடவில்லை. இந்தியா டுடே சார்பாக வெளிவந்து கொண்டிருந்த தமிழ்ப் பதிப்பை நிறுத்துவதாக, 7 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்திருந்தோம். அதன்படி நிறுத்தியும் விட்டோம். இ-பதிப்பு கூட தமிழில் கிடையாது,’’ என்றனர்.
இதுபற்றி 2015ம் ஆண்டில் ஊடகங்களில் வெளியான செய்தியை கீழே இணைத்துள்ளோம்.
OneIndia Tamil Link I TheNewsMinute Link
அடுத்தப்படியாக, மேற்கண்ட அட்டைப்படச் செய்தியை ட்விட்டரில் @paramporul என்பவர் பகிர்ந்ததாக சில ஸ்கிரின்ஷாட்களில் காண நேரிட்டது.

அவரது ட்விட்டர் பக்கம் சென்று பார்த்தபோது, இது போலியான செய்தி என்று அவரே விளக்கம் அளித்திருந்ததைக் கண்டோம்.
இதையடுத்து, பாஜக ஆதரவாளர்கள், திமுக ஐ.டி. பிரிவு இந்த வதந்தியை தயாரித்து பரப்பியதாகக் குற்றம்சாட்டியிருந்தனர். அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
எனவே, அரசியல் காரணங்களுக்காக, விகடன் குழுமம் பற்றி இந்தியா டுடே ஊடகம் செய்தி வெளியிட்டதாகச் சிலர் போலியான அட்டைப்படம் தயாரித்து பரப்ப, அதனை மற்றவர்கள் உண்மை என நம்பி சமூக வலைதளங்களில் பகிர்வதாக உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:மாதம் 50 லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட்ட விகடன்?- இந்தியா டுடே பெயரில் வதந்தி…
Fact Check By: Pankaj IyerResult: False
