Rapid FactCheck: கோவையில் இந்து மக்களுக்கு ஆண்மைக் குறைவு மருந்து கலந்த பிரியாணி விற்பனையா?
‘’கோவையில் இந்து மக்களுக்கு ஆண்மைக் குறைவு மருந்து கலந்த பிரியாணி விற்ற முஸ்லீம்கள் கைது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே +91 9049053770 நமக்கு அனுப்பி உண்மையா எனக் கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் தகவல் தேடியபோது, குறிப்பிட்ட ஸ்கிரின்ஷாட்டின் ஃபேஸ்புக் பதிவு கிடைக்கவில்லை. அதேசமயம், இதனை சிலர் ஆங்கிலத்தில், ட்விட்டரில் பகிர்வதைக் கண்டோம்.
Twitter Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வதந்தி கடந்த சில ஆண்டுகளாகவே சமூக வலைதளங்களில் பரவி வருவதால், இதுதொடர்பாக, ஏற்கனவே கோவை போலீசார் மறுப்பு தெரிவித்து, ட்விட்டரில் பதிவு வெளியிட்டிருக்கின்றனர். அந்த லிங்கை கீழே இணைத்துள்ளோம்.
அடுத்தப்படியாக, இதில் கைது செய்யப்பட்டது போல இருக்கும் நபர்கள், உத்தரப் பிரதேச மாநிலம், பிஜ்னோரில் சட்டவிரோதமான முறையில் மதராஸா உள்ளே ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். இந்த சம்பவம் 2019ம் ஆண்டு நிகழ்ந்ததாகும்.
அடுத்தப்படியாக, மாத்திரைகள் போல இதில் இருக்கும் புகைப்படம், 2019ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஒரு ரெய்டு தொடர்பானதாகும். இதுபற்றி நாமும் ஏற்கனவே உண்மை கண்டறியும் சோதனை நடத்தியுள்ளோம்.
Fact Crescendo Tamil Link I DailyMirror Link
இறுதியாக, பிரியாணி பாத்திரத்துடன் உள்ள முஸ்லீம் நபர், ஒரு யூடியுப் வீடியோவுடன் தொடர்புடையவர் ஆவார். அந்த லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
இந்த கிளெய்ம் பற்றி ஏற்கனவே ஆங்கிலத்தில் நமது உண்மை கண்டறியும் குழு விரிவான ஆய்வு நடத்தி, கட்டுரை வெளியிட்டிருக்கிறது. அந்த லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram
Title:Rapid FactCheck: கோவையில் இந்து மக்களுக்கு ஆண்மைக் குறைவு மருந்து கலந்த பிரியாணி விற்பனையா?
Fact Check By: Pankaj IyerResult: False